டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே முதல்முறையாக... ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை... டெல்லியில் நாளை தொடக்கம்..!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை நாளை டெல்லியில் தொடங்கி வைக்கப்படுகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு ஷாதரா-தீஸ் ஹஸாரே ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் தொடங்கப்பட்டது. 8.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடங்கப்பட்ட இந்த ரயில்சேவை இன்று பல நூறு கிலோமீட்டர்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

Driverless Metro train service will start in Delhi tomorrow

இதனிடையே நாளடைவில் மெட்ரோ வழித்தடங்களில் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வந்த மெட்ரோ ரயில் நிறுவனம், அடுத்தக் கட்டமாக இந்த புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளது.

டெல்லி சான்க்யபுரி-பொட்டானிக்கல் கார்டன் இடையே உள்ள வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் நாளை முதல் இயக்கப்படவுள்ளது. இதன் மொத்த தூரம் 38 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் தானியங்கி தொழில்நுட்ப வசதியுடன் மெட்ரோ ரயில் இயங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அமையப் போகும் சுற்றுவட்டப் பாதை: மெட்ரோ ரயில் நிறுவனம் சூப்பர் திட்டம் சென்னையில் அமையப் போகும் சுற்றுவட்டப் பாதை: மெட்ரோ ரயில் நிறுவனம் சூப்பர் திட்டம்

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரயில்களும் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்படவுள்ளது. உலகின் பல நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இப்போது தான் இந்தியாவில் அறிமுகமாகிறது.

Driverless Metro train service will start in Delhi tomorrow

டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் 8-வது வழித்தடமான மெஜந்தா வழித்தடத்தில் இந்த புதிய முயற்ச்சி நடைமுறைக்கு வருகிறது. நாளை நடைபெறும் தொடக்கவிழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

English summary
Driverless Metro train service will start in Delhi tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X