போதைப்பொருள் வழக்கு.. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்.. காவலை நீட்டித்து டெல்லி கோர்ட் அதிரடி
டெல்லி: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அவர் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் கடத்தப்பட இருந்த ரூ. 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது ஜாபர் சாதிக் பிடிபட்டார். இதையடுத்து, அவரை டெல்லி அழைத்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
தற்போது டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை வரும் 29 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாபர் சாதிக் உடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சதானந்தம், முஜிபுர், முகேஷ் , அசோக் குமார் ஆகியோரையும் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் காவலும் வரும் 29 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications