‛‛பிராமணர் VS தலித்’’.. ஜெய்ராம் ரமேஷ் புத்திசாலினா நான் மந்தமானவனா? ஜெகதீப் தன்கரால் கோபமான கார்கே
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேசை பார்த்து மிகவும் புத்திசாலி என்று ராஜ்யசபா தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறிய நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கோபம் அடைந்தார். அதோடு ஜெய்ராம் ரமேசை மிகவும் புத்திசாலி என்பதை நீங்கள் வர்ணாசிரமத்தை மனதில் வைத்து தான் கூறியுள்ளீர்கள் எனக்கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் எம்பிக்கள் பதவியேற்றனர். அதன்பிறகு 26 ம்தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதையடுத்து 27ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.

இதையடுத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதில் உரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். இத்தகைய சூழலில் தான் இன்று காலையில் வழக்கம்போல் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் சபை நடவடிக்கை தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி எழுந்து பேசினார். இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு பேசினார்.
அப்போது ஜெய்ராம் ரமேசை பார்த்து ஜெக்தீப் தன்கர், ‛‛நீங்கள் புத்திசாலி, திறமையானவர். நீங்கள் உடனடியாக வந்து கார்கேவின் இருக்கையில் அமர வேண்டும். ஏனென்றால் கார்கேவின் செய்ய வேண்டிய பணியை நீங்கள் அதிகமாக செய்கின்றனர்'' என்று கூறினார். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். இத்தகைய சூழலில் தான் கார்கேவின் பணியை காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் செய்வதாக ஜெக்தீப் தன்கர் கூறினார். ஜெக்தீப் தன்கரின் இந்த கருத்து மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தியானார்.
மேலும் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், ‛‛உங்களின் மனதில் வர்ணாஷ்ரம சிஸ்டம் (வர்ணாஷ்ரம என்பது ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து வைப்பது என்று கூறப்பட்டு வருகிறது) உள்ளது. அதனால் தான் நீங்கள் அவரை (ஜெய்ராம் ரமேசை) புத்திசாலி என்று கூறியுள்ளதோடு, என்னை மந்தனாவர்கள் என்று சொல்லி உள்ளீர்கள்'' என்றார். ஜெய்ராம் ரமேஷ் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். மல்லிகார்ஜுன கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை கார்கே மறைமுகமாக சுட்டிக்காட்டி ஜெக்தீப் தன்கரை விமர்சனம் செய்தார்.
இந்த வேளையில் குறக்கீட்ட ஜெக்தீப் தன்கர், ‛‛இல்லை.. இல்லை.. தயவு செய்து உட்காருங்கள் கார்கே ஜி. ஒரு நொடி காத்திருங்கள். நான் சொன்னதை நீங்கள் (கார்கே) சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் உங்களை மதிக்கிறேன். நான் உங்களுக்காக தான் இருக்கிறேன். உங்களுக்கு அரசியலில் 56 ஆண்டு கால அனுபவம் உள்ளது. ஒவ்வொரு நேரத்திலும் ஜெய்ராம் ரமேஷ் கமெண்ட்டுகளை சொல்லி ங்களுக்கு உதவ நினைக்கிறார். இந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டிய சூழல் உள்ளது'' என்றார்.
இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்த மல்லிகார்ஜுன கார்கே, அருகே இருந்த சோனியா காந்தியை காட்டி, ‛‛இந்த நபர் தான் என்னை இங்கு வரும்படியாக உருவாக்கினார். நான் இப்போது அவர் அருகே உட்கார்ந்திருக்கிறேன். மற்றவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்பட உங்களாலும் என்னை இப்படி உருவாக்க முடியாது. என்னை உருவாக்கியது மக்கள்'' என்றார். கார்கேவின் இந்த பேச்சு ஜெக்தீப் தன்கர் டென்ஷனானார்.
இதையடுத்து அவர், ‛‛நீங்கள் (கார்கே) ஒவ்வொரு முறையும் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று பேச முடியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தலைவர் இருக்கைக்கு அவமரியாதை செய்ய முடியாது. ஏனென்றால் நீங்கள் திடீரென்று எழுந்து நின்று நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமலேயே பேசுகிறீர்கள். இந்த நாட்டின் வரலாற்றில் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் ராஜ்யசபா நடவடிக்கைகளில் உங்களை போல் யாரும் அலட்சியம் செய்தது இல்லை. நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. உங்களின் கண்ணியம் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் நான் உங்களின் கண்ணியத்தை காக்கவே முயற்சித்தேன்'' என்றார். இந்த விவாதம் ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications