Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரஃபேல் விமானம், நீர்மூழ்கி கப்பல்கள்!"பிரான்ஸிடம் இருந்து வாங்க ரெடியாகும் இந்தியா! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது ராணுவத்தை நவீனமயமாக்கும் பணிகளில் இந்தியா மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்சிடம் இருந்து இந்தியா 26 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வாங்க உள்ளது.

உலகின் மிக பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அதேநேரம், நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை மேலும் நவீனமானதாக மாற்ற வேண்டும் என்பதைப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தியே வருகின்றனர்.

 During PM Modi France Visit India Likely To buy 26 Rafales, 3 Scorpene Subs

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமானதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது. உலகின் பல நாடுகளிடம் இருந்து நவீன ஆயுதங்களை இந்தியா வாங்கி செய்து வருகிறது.

ரஃபேல் விமானங்கள்: இதற்கிடையே இப்போது பிரான்சிடம் இருந்து இந்தியா 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கோரிக்கையைப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பாதுகாப்புப் படைகள் முன்வைத்துள்ளதாகவும் இதற்கு அரசும் ஒப்புதல் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் பிரான்ஸ் செல்லும் நிலையில், அப்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

அதன்படி இந்தியக் கடற்படைக்கு 22 ஒற்றை இருக்கை ரஃபேல் மரைன் விமானங்களும் நான்கு பயிற்சி விமானங்களும் கிடைக்கும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றாக்குறையை இருப்பதாகவும் இதனால் புதிய விமானங்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியாவுக்கு உடனடியாக தேவை என்று கடற்படை தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்கள்: விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் ஆகியவை மிக்-29 விமானங்களை இயக்கி வருகின்றன. ரபேல் விமானங்களும் இந்த இரண்டு போர்க் கப்பல்களில் இருந்தே இயங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் ப்ராஜெக்ட் 75இன் ஒரு பகுதியாகக் கடற்படையால் மீண்டும் வாங்கப்படும்.

சுமார் ₹ 90,000 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் பின்னர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகே துல்லியமாக எவ்வளவு கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என்பது நமக்குத் தெரிய வரும். வழக்கமாக மற்ற நாடுகளுக்கு விற்கப்படும் நிலையைக் காட்டிலும் இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் சலுகையில் விலையிலேயே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

மேக் இன் இந்தியா: அதேபோல 'மேக்-இன்-இந்தியா' திட்டத்தையும் இதில் வலியுறுத்தும் என்றே தெரிகிறது. இதற்கு முன்பு பிரான்ஸிடம் இருந்து இந்தியா 36 ரபேல் விமானங்களைப் பெற்றிருந்தது. அதேபோல இந்த முறையும் இது குறித்த ஒரு கூட்டுக் குழுவை உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தும் என்றே தெரிகிறது.

பிரதமர் இன்னும் சில நாட்களில் பிரான்ஸ் நாட்டிற்குக் கிளம்பும் நிலையில், அதற்கு முன்பு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து பிரதமரின் பிரான்ஸ் பணத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+