வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் விரைவில் வாக்களிக்கும் வசதி? இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் விரைவில் வாக்களிக்கும் வசதியை அமல்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
தலைநகர் டெல்லியில் 2022 ஆண்டு பிரிவில் ஐ.எப்.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறுபவர்கள் மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாடினார். 'இந்தியா-ஜனநாயகங்களின் தாய் மற்றும் தேர்தல் கமிஷனின் பங்கு' என்ற தலைப்பில் ராஜீவ் குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆன்லைன் மூலமாக வாக்குரிமை அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் கோரிக்கை என்பதால் அதை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். என்று ராஜீவ் குமார் கூறினார்.
இது தொடர்பாக மேலும் ராஜீவ் குமார் கூறியதாவது:- இந்தியவில் நடைபெறும் தேர்தல்கள் உலக அளவில் பாராட்டப்படுகிறது. ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக தற்போது உலக அளவில் கவலை அதிகரித்து வரும் அதே நேரத்தில் , 1952-ம் ஆண்டில் இருந்து இந்தியா வெற்றிகரமாக தேர்தல் நடத்தி வருகிறது. இந்தியாவின் தேசிய வலிமைக்கு இது உதாரணமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், தேர்தல் நடத்துவதற்கு சவால்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், ஓட்டு போட தகுதியுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் அதாவது ஆன்லைனில் ஓட்டு போடும் வசதியை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications