சோனியா காந்தி விடுத்த கோரிக்கை.. டக்கென ஏற்றுக்கொண்ட அமலாக்க துறை! இது நேஷனல் ஹெரால்டு விசாரணை
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகச் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் இது சர்ச்சையானது. அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது.

விசாரணை
அமலாக்கத் துறை தொடர்ந்து இருந்த அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கடந்த வாரம் ராகுல் காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். முதலில் மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொஞ்சம் பிரேக் விட்டு மீண்டும் இரு நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி
5 நாட்களில் மொத்தம் 50 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கேள்விகளால் துளைத்து எடுத்து உள்ளனர். இதனிடையே சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்தச் சூழலில் தான், இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி
இதனிடையே மருத்துவர்கள் பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகச் சோனியா காந்தி அவகாசம் கோரி இருந்தார். இது குறித்து காங்கிரஸின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "சோனியா காந்தியை வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறைக்கு கடிதம் எழுதியுள்ளார், அவர் முழுமையாகக் குணமடையும் வரை விசாரணையை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

ஏற்பு
ராகுல் காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சோனியா காந்தி இப்போது மருத்துவ காரணங்களால் அவகாசம் கோரி உள்ளார். சோனியா காந்தியின் இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து சோனியா காந்திக்கு விரைவில் புதிய சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அவர் எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications