டெல்லியில் பதற்றம்.. முதலமைச்சர் கெஜ்ரிவாலை நெருங்கிய ED! தனிச்செயலர் உட்பட 10 பேர் இடங்களில் ரெய்டு
டெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோத பணிப்பரிமாற்ற வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் குற்றம்சாட்டப்பட்ட அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புடைய 10 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரூ.30 கோடி மதிப்பிலான டிஜேபி ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து டெல்லி பாஜக செயலாளர் கபில் மிஸ்ரா தெரிவிக்கையில், "அர்விந்த் கெஜ்ரிவால் கும்பலின் ஊழல் உண்மையின் அழுக்கும் நாற்றமும் என்பது நாஜப்கர் சாக்கடையை விட மோசமானது.
ஒவ்வொரு துறையில் ஊழல்களும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன. அதன் உண்மை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தண்ணீரிலும் மருந்துகளிலும் ஊழல் செய்வது வெட்கக்கேடான செயல். ஊழல் வாதிகளுக்கான ஒரே இடம் சிறை." என்றார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியில் இணைவதற்காக பாஜக பணம் தருவதாக பேரம் பேசியதாக கடந்த வார இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிஷி ஆகியோர் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது.
கடந்த சனிக்கிழமை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 5 வது முறையாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்தது. இந்த வழக்கு கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications