Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசமாக சிக்கும் நடிகை ஊர்வசி ரவுடேலா.. நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்! சூதாட்ட செயலியால் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவையும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தியையும் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பி அழைத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது.

ed-summons-urvashi-rautela-and-mimi-chakraborty-in-1xbet-online-gambling-scam

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு சம்மன்

முன்னதாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் விளம்பரம் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறையினர் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்து, அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

15 ஆம் தேதி ஆஜராக வேண்டும்

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 15 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. ஊர்வசி ரவுத்தேலா செப்டம்பர் 16ஆம் தேதி, மிமி சக்ரவர்த்தி செப்டம்பர் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

8 மணி நேரம் ஷிகர் தவானிடம் விசாரணை

சட்டவிரோத சூதாட்ட தளங்கள் மற்றும் பிரபலங்களின் விளம்பரங்கள் மீது நடத்தப்படும் தீவிர விசாரணையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே பல முக்கிய பிரபலங்கள் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர்.

இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இந்த மாத தொடக்கத்தில் சம்மன் செய்யப்பட்டார். சுமார் 8 மணி நேரம் ஷிகர் தவானிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

நடிகர் ராணா டகுபதி தனது திரைப்பட வேலைகள் காரணமாக ஜூலை 23 அன்று அனுப்பப்பட்ட சம்மனை ஒத்திவைக்கக் கோரிய பிறகு, ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். மே மாதம், தெலுங்கானா போலீசார், சூதாட்ட விளம்பரங்களில் ஈடுபட்டதாக ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இருவரும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், ஆன்லைன் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் சட்டபூர்வமான பகுதிகளில் மட்டுமே தளங்களை ஆதரித்ததாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி போன்ற பிற பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+