வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு
Recommended Video
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டன.

பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தேர்தல் ரத்து செய்யப்படுமா அல்லது இல்லையா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னால், அரசியல் அழுத்தம் உள்ளதாக துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications