ஜூன் 25ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் பெனாய் விஸ்வம், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் எளமரம் கரீம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே. மணி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 7 கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதன்பிறகு, ராஜ்யசபா தேர்தலை நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். ஜூன் 6ஆம் தேதி 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் 13ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 18.

ஜூன் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கேரளாவின் 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலையே, ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவிக்கான இடைத்தேர்தலும் ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரபுல் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications