வந்தது லோக்சபா திருவிழா... 7 கட்டங்களாக வாக்குப் பதிவு... அறிவித்தது தேர்தல் ஆணையம்
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் இடைத்தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு 9 கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன்படி இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசேக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சமயம் அவர் கூறுகையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
அதில் ஏப்ரல் 11-ஆம்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 , 3 -ஆவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23, 4-ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29, 5-ஆம் கட்ட தேர்தல் மே 6, 6-ஆம் கட்ட தேர்தல் மே 12, 7-ஆம் கட்ட தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான கடைசி தேதி மார்ச் 26 ஆகும். மனுக்களை பரிசீலிக்க மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும். அதை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 29 ஆகும்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications