ஃபார்ம் 17 சி எங்கே? தேர்தல் ஆணையம் மீது கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு.. ஏன் முக்கியம்? பின்னணி
டெல்லி: தேர்தலில் ஓட்டு எண்ணும் முன்பே ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் ஃபார்ம் 17 சி விவரங்களை வழங்க மறுத்துள்ளதாக அவர் கூறியுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு ஏன் முக்கியம்? அவரது குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 60.42 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. முதலில் தபால் ஓட்டுகளும், அதன்பிறகு வாக்குபெட்டியில் பதிவாகி உள்ள ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பதிவான விவரங்களை அறிந்து கொள்ளும் ஃபார்ம் 17 சி-யை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த பதிவில், ‛‛பலமுறை கோரிக்கை வைத்தாலும் கூட ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஃபார்ம் 17சி ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆம்ஆத்மி கட்சி transparentelections.com என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளது. அங்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கான ஃபார்ம் 17 சி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஃபார்மில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் விபரங்கள் உள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் இந்த தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முறையில் இந்த டேட்டாவை வழங்கி உள்ளோம். தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காக தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுப்பது துரதிர்ஷ்டவசமானது'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛தேர்தல் நடத்தை விதிகள் 1961ன்படி விதி 49எஸ்-ன் படி அனைத்து தலைமை அதிகாரிகளும் படிவம் 17 சி ல் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் குறித்த கணக்கை வாக்குப்பதிவு நாளிலேயே வாக்குச்சாவடி முகவரிடம் ஒப்படைத்தனர். 2025ல் நடந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இந்த விதி முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications