தேர்தல் வாக்குறுதிகளில்.. இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு! உடனே விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், பணக்காரன் - ஏழை என்ற பாகுபாடுகூட இல்லாமல், கண்மூடித்தனமாக இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. தேர்தலைக் குறிவைத்து, பொது நிதியைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் நடத்துகிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தது.

வருமானம் அதிகமாக இருக்கும் மாநிலமாக இருந்தாலும், விவேகமற்ற இலவசங்களை அளிப்பதை விட, நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல வருவாய் பற்றாக்குறையில் இயங்கும் மாநிலங்கள்கூட, இலவசங்களுக்கு நிதியைத் தாராளமாக செலவழிக்கின்றன என்று தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை அறிவிக்கவும், பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்கு தடைகோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "நேற்று கேரளா மாநிலத்தில் தேர்தல் வருகிறது, அதனால் இது போன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது தமிழ்நாடு தேர்தல் வருகிறது. எனவே இந்த மனுவை நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள். இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications