Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காங்கிரஸ் 2.o!" 2024ஐ குறி வைத்து பிகே போட்ட மாஸ்டர் பிளான்! சோனியா முடிவு என்ன? வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு குறித்து அவர் முன்வைத்த திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Congress கட்சியில் இணையும் Prashant Kishore? | Oneindia Tamil

    காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருவது அக்கட்சியின் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருந்தது இதைப் பல மடங்கு அதிகரித்தது.

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

     பிகே

    பிகே


    இந்தச் சந்திப்பில் அவர் அடுத்து வரும் தேர்தலைக் காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் 3 நாட்களில் இரு முறை காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தார். பிகே முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்ட சந்திப்பில் ராகுல் மற்றும் பிரியங்கா இடம் பெற்று இருந்த நிலையில், இரண்டாம் கட்ட சந்திப்பில் அவர்கள் இடம் பெறவில்லை. பிகே திட்டம் குறித்து ஆலோசிக்கச் சிறப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

     காங்கிரஸ் 2.o

    காங்கிரஸ் 2.o


    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகே முன்மொழிந்த திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பிகேவின் இந்த காங்கிரஸ் 2.o திட்டம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட, இது 2024 தேர்தலைக் குறி வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

     கடந்த ஆண்டு

    கடந்த ஆண்டு

    கடந்த ஆண்டே பிகே காங்கிரஸ் கட்சியில் இணையத் திட்டமிட்டு இருந்தார். அப்போது அவர் முன்வைத்த திட்டங்களின் நீட்சியாகவே அல்லது அப்டேட் செய்யப்பட்ட ஒன்றாகவே இந்த காங்கிரஸ் 2.o திட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 1984 முதல் 2019 வரை காங்கிரஸ் இறங்கு முகத்தில் இருந்த நிலையில், அதைச் சரி செய்யும் வகையிலேயே பிகேவின் திட்டம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு முன்வைத்த மறுசீரமைப்பு திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

     செயல் தலைவர்

    செயல் தலைவர்

    காங்கிரஸ் அதன் சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பத் திட்டம் தேவை. காங்கிரஸ் தலைவராகச் சோனியா காந்தி இருக்கும் அதேநேரம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வாரிய தலைவராக இருக்கலாம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

     5 முக்கிய நடவடிக்கை

    5 முக்கிய நடவடிக்கை

    காங்கிரஸ் எடுக்க வேண்டிய 5 முக்கிய நடவடிக்கை குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. கூட்டணி சிக்கலைத் தீர்ப்பது, கட்சியின் ஸ்தாபக கொள்கைகளை மீட்டெடுப்பது, உள்ளூர் அளவில் தலைவர்கள் தொண்டர் படையை உருவாக்குவது, ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் பிரசாரத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் முன்னிறுத்தி உள்ளார்.

     புதிய காங்கிரஸ்

    புதிய காங்கிரஸ்

    அனைத்து தரப்பு மக்களையும் உருவாக்கும் வகையில் புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது. காங்கிரஸ் மதிப்புகள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பது. கூட்டணி சிக்கலைச் சரி செய்வது. வாரிசு அரசியலைத் தடுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு கொடுப்பது. அனைத்து மட்டங்களிலும் உட்கட்சி தேர்தலை நடத்துவது. காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிலையான பதவிக்காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

     15 ஆயிரம் உள்ளூர் தலைவர்கள்

    15 ஆயிரம் உள்ளூர் தலைவர்கள்


    காங்கிரஸ் மீது தீவிர பற்ற உள்ள 15,000 உள்ளூர் தலைவர்கள் மற்றும் 1 தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை முறையாக அமல்படுத்தினால் மட்டும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் புத்துயிர் செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பிகே திட்டம் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசனை செய்து வரும் நிலையில், அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+