கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மீண்டும் மோடி படம்!5 மாநில தேர்தல் முடிந்ததால் விரைவில் இடம்பெறுகிறது
டெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பொறித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தான் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை கடந்த ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் முடிவு
அதன்படி உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் பிப்ரவரி 14ல் ஒரே கட்டங்களாக தேர்தல் நடந்தது. மணிப்பூரில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10ல் வெளியிடப்பட்டன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், பிற மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளன.

மோடி படம் நீக்கம்
முன்னதாக தேர்தல் தேதி அறிவிப்பால் ஜனவரி மாதம் முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகின. இதையடுத்து கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவின் இணையதளத்திலும் மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றம் செய்தது. இதையடுத்து 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு வழங்கிய சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறவில்லை.

மீண்டும் மோடி படம்
இந்நிலையில், தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 மாநிலங்களில் புதிதாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவாவில் மட்டும் இன்னும் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. இங்கும் விரைவில் ஆட்சி அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் கொரோனா சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டவியா ஆர்வமாக உள்ளார்.

இணையதளத்தில் மாற்றம்
இதனால் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை இடம்பெற செய்வதற்கான பணிகள் துவங்க உள்ளது. இதற்காக கோவின் இணையதளத்தில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications