"ஜிஹாத் கண்ட்ரோல் போர்ட்".. ஜேசிபிக்கு புதுவிளக்கம் அளித்த பாஜக எம்பி.. பரபரப்பு கருத்து!
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று துவங்கியது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாஜக எம்பி நரசிம்மராவ், ‛‛ஜேசிபி என்பது ஜிகாத் கட்டுப்பாடு வாரியம்'' என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்ல வன்முறையானது. வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்நிலையில் தான் டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை ஜேசிபி வாகனம் மூலம் கடைகள், வீடுகள் அகற்றும் பணி துவங்கியது. வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே தான் ஆக்கிரமிப்பு அகற்ற டெல்லி உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி உடனடியாக நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால் ஆக்கிரமிப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியில் நீதிமன்றம் உத்தரவிட்ட 2 மணிநேரத்துக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

ஜேசிபிக்கு புதுவிளக்கம்
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம் மக்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் பாஜகவின் எம்பி நரசிம்மராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛JCB என்பது ஜிகாத் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(Jihad Control Board) சமமானது. ஜேசிபி என்பது புல்டோசரை குறிக்கும்'' என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடரும் கருத்து மோதல்கள்
இதனால் பாஜக அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஓவைசி, ஆம்ஆத்மி, காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் பாஜகவினரோ வேறு ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களை விரட்ட தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக பாஜகவின் கபில் மிஸ்ரா தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் ஆம்ஆத்மி, பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications