யோசிக்க முடியாத பிளான்! செந்தில் பாலாஜிக்கு கடைசி நேரத்தில் புது செக் வைத்த அமலாக்கத்துறை.. சிக்கல்
டெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தீர்ப்பு இந்த வழக்கில் பொருந்துமா என்பது பற்றிய விவாதங்கள் நேற்று நடந்தன. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்க காரணமே.. நீண்ட காலம் அவர் சிறையில் இருந்ததுதான். அது செந்தில் பாலாஜிக்கு பொருந்தாது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை புதிய ரூட் ஒன்றை எடுத்துள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிவடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேட்டது . இதற்கு நடுநிலையான அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டால், 6 மாதங்கள் ஆகும் என்று கூறி உள்ளது அமலாக்கத்துறை. அதாவது இதில் அமலாக்கத்துறை பிளான்.. வழக்கறிஞரை மாற்றுவதுதான்.

அதாவது தமிழக அரசு சார்பாக ஆஜராகும் அரசு வழக்கறிஞரை மாற்றி.. வடஇந்தியாவில் இருந்து ஒருவரை டெல்லியே நியமிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை திட்டமிடுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசு வழக்கறிஞர் ஜாமின் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசி வருகிறீர்கள்; முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இருந்தால் வலுவான வாதங்களை வைக்க முடியாது என்பதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அரசு வழக்கறிஞரை கோர்ட்டே நியமிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை அமலாக்கத்துறை வைத்துள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா பென்ச். ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
நம்பிக்கை: இந்த வழக்கு காரணமாக செந்தில் பாலாஜி முகாமில் பல்பு எரியத் தொடங்கியிருக்கிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வந்த ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இதனை அடுத்து அவர் ரிலீஸ் ஆகவிருக்கிறார். சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதுதான் செந்தில் பாலாஜி தரப்புக்கு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஏற்கனவே, ஆகஸ்ட் முதல்வாரத்தில் செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆகிவிடுவார், சுதந்திர தினம் முடிந்ததும், ஆகஸ்ட் 17-ல் அவர் மீண்டும் அமைச்சராகி விடுவார் என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தரப்பில் பரவி வந்தது. செந்தில் பாலாஜி முகாமில் பல்பு எரியத் தொடங்கியிருக்கிறது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வந்த ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இதனை அடுத்து அவர் ரிலீஸ் ஆகவிருக்கிறார். சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதுதான் செந்தில் பாலாஜி தரப்புக்கு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.
உற்சாகத்தில் செந்தில் பாலாஜி: தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப மணீஸ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் செந்தில் பாலாஜிக்கும் கிடைத்து விடும் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். இது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''ஆகஸ்ட் 12-ல் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையை மூன்று முறை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். அதாவது, செந்தில் பாலாஜி விசயத்தில் ஏன் வாய்தா மேல் வாய்தா கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்? என்றெல்லாம் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
இது எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம் தான். ஏற்கனவே அழுத்தமான வாதங்களை சீனியர் லாயர்கள் வைத்திருக்கிறார்கள். அதை நீதிமன்றம் மறுக்கவில்லை. அதனால் இனியும் செந்தில் பாலாஜியை சிறையிலேயே வைத்திருக்க வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், 12-ந்தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிசோடியாவுக்கு கிடைத்தது எங்களுக்கும் கிடைக்கும்'' என்று நம்பிக்கை யுடன் சொல்கின்றனர்.
அதேசமயம், அமலாக்கத்துறை தரப்பில் விசாரித்த போது, சிசோடியோ வழக்கை செந்தில் பாலாஜி வழக்கோடு முடிச்சுப் போடாதீர்கள். இரண்டு வழக்குகளின் குற்றமும் தன்மையும் வெவ்வேறு. அதனால், செந்தில் பாலாஜி விசயத்தில் 12-ந்தேதி நல்லது நடக்க வாய்ப்பில்லை. பொறுத்திருந்திருந்து பாருங்கள்'' என்கிறார்கள். இதற்கிடையே, சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தியதோடு, நம்பிக்கையோடு இருங்கள் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறார்களாம் வழக்கறிஞர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications