30 வருடம் மகனின் படிப்புக்காக உழைப்பு.. அம்மாவிற்கு விமானத்தில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி
டெல்லி: 30 ஆண்டுகளாக மகனின் படிப்புக்காக உழைத்த அம்மா, லெபானில் இருந்து சொந்த நாடானா எத்தியோபியாவிற்கு விமானத்தில் ஏறுகிறார். அப்போது அந்த விமானத்தை தன் மகன் தான் ஓட்டப் போகிறார் என்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைகிறார். அப்போது நடந்தவை குறித்து ஸ்ரீதரன் மதுசூதனன் ஐஎப்எஸ் கூறியதை பார்ப்போம்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் மதுசூதனன் இந்திய வெளியுறவுத்துறையின் இணை செயலாளரான பணியாற்றி வருகிறார். இவர் பதினான்கு ஆண்டுகள் சீனமொழிச் சூழலில் (பெய்சிங்கிலும் ஹாங்காங்கிலும் தாய்வானிலும்) பணியாற்றியவர் ஆவார். அமெரிக்காவிலும் ஃபிஜித் தீவுகளிலும் பணியாற்றியவர் தூதராக பணியாற்றி உள்ளார்.

ஸ்ரீதரன் மதுசூதனன் சமூக வலைதளங்களில் பயணி தரன் என்ற புனைப்பெயரில் பல்வேறு நூல்கள் கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதரன் மதுசூதனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அம்மா மகன் பாசம் தொடர்பான ஒரு காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் விரும்பப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பேர் லைக் செய்யும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

வெறும் வீடியோ மட்டுமல்ல, அதற்கு ஸ்ரீதரன் மதுசூதனன் ஐஎப்எஸ் கொடுத்த விளக்கமும் தான் மக்கள்அதிகம் பேர் விரும்ப காரணம். அப்படி என்ன பதிவிட்டார் என்பதை இப்போது பார்ப்போம்.

"சமயங்களில் வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக விரிவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கணம் இது. எத்தியோப்பியப் பெண் ஒருவர், 30 ஆண்டுகளாக லெபனான் நாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சேர்க்கிறார், தனது மகனின் படிப்புக்காக. அவர் கடைசியாக லெபனானை விட்டு எத்தியோப்பியா திரும்பிச்செல்ல விமானம் ஏறுகிறார். அப்போது அவரது டீ-சர்ட்டில் எழுதியிருக்கும் வாசகம்: 'உனக்கு வேண்டியதாக நீ போராடாவிட்டால், நீ இழந்ததற்காக அழாதே.'

அவர் விமானத்தின் மீது அடியெடுத்து வைக்கும்போது, ஒரு விமானப் பணிப்பெண் அவளுடைய பெயரைச் சரிபார்த்துவிட்டு... ஒரு திரைச்சீலையை ஒதுக்குகிறார். அங்கே அவன் நிற்கிறான்-அவருடைய மகன், விமானியின் வெள்ளைச் சீருடையில். கையில் ஒரு பெரிய பூங்கொத்து.
சமயங்களில் வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக விரிவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கணம் இது. எத்தியோப்பியப் பெண் ஒருவர், 30 ஆண்டுகளாக லெபனான் நாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சேர்க்கிறார், தனது மகனின் படிப்புக்காக. அவர் கடைசியாக லெபனானை விட்டு எத்தியோப்பியா திரும்பிச்செல்ல விமானம்… pic.twitter.com/M59yrg1uhy
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) October 28, 2023
அவனை அங்கே பார்த்ததும் அந்தப் பெண் வாய்விட்டு அழுகிறார். மகனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார், மீண்டும் மீண்டும். அரை மண்டியிட்டு, ஒரு மௌனமான, மனப்பூர்வமான நன்றியுணர்வு பிரார்த்தனையைச் செய்கிறார். இறுதியில், 30 ஆண்டுகளாக உழைத்த அதே கைகளுடன், இந்த இனிமையான தருணத்திற்காக தனது மகனும் விமானக் குழுவினரும் ஏற்பாடு செய்த கேக்கை வெட்டி கொண்டாடுகிறார்" இவ்வாறு அந்த வீடியோ குறித்து ஸ்ரீதரன் மதுசூதனன் கூறினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications