சாணக்கியரே ஷாக் ஆகியிருப்பார்.. பிரியங்கா காந்தி சொன்னதுமே குலுங்கி குலுங்கி சிரித்த அமித்ஷா
டெல்லி: "இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே அதிர்ந்து போயிருப்பார்" என அமித் ஷாவைப் பார்த்து பிரியங்கா காந்தி கிண்டலாகக் கூற, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது.
மத்திய அரசின் திட்டப்படி, மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று அரசு கூறினாலும், இது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டன.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நேற்று நடந்தது. அப்போது வயநாடு எம்பி பிரியங்கா காந்தி பேசுகையில், "மத்திய அரசின் இந்த நகர்வு தேர்தலுக்கான 'ட்ரம்ப் கார்டு' என்று விமர்சித்தார். பாஜகவினர் அரசியலமைப்பைச் சிதைப்பதன் மூலம் தங்கள் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துகின்றனர் என்று அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், இந்த மசோதாவில் அரசியல் வாடை அடிக்கிறது. பிரதமர் மோடி முன்னதாகப் பேசும்போது இந்தத் திட்டத்தைத் தடுத்தது காங்கிரஸ் என்பது போலப் பேசினார். ஆனால், இதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால், 1928-லேயே என் தாத்தா மோதிலால் நேரு இதற்கான விதையைப் போட்டார். பின்னர் எனது தந்தை ராஜீவ் காந்தி தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்" என்று பதிலடி கொடுத்தார்.
அமித் ஷாவை சிரிக்க வைத்த பிரியங்கா
பிரியங்கா காந்தி பேசிக்கொண்டிருந்த போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் சிரித்துக் கொண்டே ஏதோ பேசினர். இதைக் கவனித்த பிரியங்கா காந்தி, உடனே அமித் ஷாவைப் பார்த்து, "நீங்கள் எல்லாரும் பிளான் பண்ணித்தான் வந்திருக்கிறீர்கள். இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே ஷாக் ஆகியிருப்பார்" என்று கமெண்ட் அடித்தார்.
பிரியங்காவின் இந்தப் பேச்சைக் கேட்டு அமித் ஷா விழுந்து விழுந்து சிரிக்க, அவையில் இருந்த மற்ற எம்பிக்களும் சிரிப்பில் மூழ்கினர். இறுதியில், "பெண்களுக்குப் பொய் சொல்பவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் குணம் உண்டு, அதனால் பாஜக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று ஒரு போடு போட்டுவிட்டுப் பிரியங்கா தனது உரையை முடித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications