இமயமலையில் வேகமாக உருகும் பனி.. காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பேரழிவு!
டெல்லி: இமயமலை பனி கோட்டின் அளவு 490 அடி வரை குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காலநிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதே நிலை நீடித்து வந்தால் விரைவில் இயமலையில் உள்ள பனி அனைத்தும் உருகிவிடும் என்றும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக உயரமான மலைகளில் பனி படர்ந்து இருக்கும். ஆனால் மலை முழுவதும் இந்த பனி இருக்காது. உச்சியில் தொடங்கி மலையின் பாதி வரை மேலிருந்து கீழாக பனி இருக்கும். பாதிக்கு கீழ் உள்ள பகுதிகள் பச்சை பசுமையாக தெரியும். இப்படியாக பனி இருக்கும் மேல் பகுதியையும், பனி இல்லாத கீழ் பகுதியையும் பிரிக்கும் கோடுதான் 'பனிக்கோடு' என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
குளிர்காலங்களில் இந்த பனிக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கத் தொடங்கும். அதே வெயில் காலம் வரும் பொழுது நார்மலான இடத்திற்கு கோடு சென்றுவிடும். இமயமலையை பொறுத்தவரையில் இந்த நார்மலான கோடு சுமார் 490 அடி வரை குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
மலையின் உச்சியில் இருந்து 20,000 அடி வரை படர்ந்து இருந்த பனியானது, தற்போது 19,1510 அடி வரை மட்டுமே படர்ந்து இருக்கிறது. 490 அடி உயரத்திற்கான பனிக்கோடு கரைந்திருக்கிறது.
இதுகுறித்த விஞ்ஞானிகளின் அறிக்கையை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி இமயமலையில் உச்சியில் இருந்து 20,000 அடி வரை பனி படர்ந்து இருந்ததை ஆய்வாளர்கள் கணக்கிட்டு இருக்கின்றனர். ஆனால் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இந்த பனியின் அளவு 19,510 அடியாக குறைந்திருக்கிறது.
நாசாவின் பூமி ஆய்வகத்தின் அறிவியல் ஆலோசனை குழு இந்த ஆய்வுகளை வெளியிட்டு இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்தக் குழுவின் உறுப்பினரான மௌரி பெல்டோ, செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்யும் போது இந்த மாற்றத்தை அடையாளம் கண்டதாக கூறி இருக்கிறார். வறண்ட மற்றும் வெப்பமான சூழ்நிலை காரணமாக இந்த பனிக்கோடு உயர்ந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக நாசாவின் 'லேண்ட்சார்ட் 9' செயற்கைக்கோள் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்கப்பட்ட படத்தையும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம் என்பது பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மாசுகளால் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து கார்பன் வெளியாகிறது. உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவு கணிசமாக இருப்பதால் அவற்றை குறைக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உதாரணமாக இந்தியா-அமெரிக்கா இரண்டையும் எடுத்துக் கொண்டால், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவு அதிகமாக இருக்கிறது. அமெரிக்கா வளர்ந்த நாடு. வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் செல்வம் இருப்பதால் இயற்கை எரிவாயுவுக்கு பதில், சூரிய மின்சக்தி அல்லது காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அந்நாடுகள் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இதுவே இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் அந்நாடு இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச சூழலியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இமயமலையில் பனியின் அளவு குறைந்து இருப்பது விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications