10% இடஒதுக்கீடு வழக்கு.. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு தருவதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பியது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் இதன் மூலம் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால் இந்த திட்டம் இடஒதுக்கீட்டையே கேள்விகுறியாக்குவதாக உள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன. முதலில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பல துறைகளில் முறையாக பின்பற்றப்படவில்லை.

10 சதவீதம் இடஒதுக்கீடு
அது போக சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்றுதான் இந்த இடஒதுக்கீடு கொண்டு.வரப்பட்டது அப்படி இருக்கும் போது.. சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் களையப்படும் முன்பே முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது என்பது இடஒதுக்கீடு கொண்டு வந்ததற்கே எதிரானதாக மாறிவிடும். இத்தனை வருடமாக செய்யப்பட்ட மாற்றங்களை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வழக்கு
இந்த வழக்குகள் 5 நீதிபதி அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி, பெலா எம் திரிவேதி, ஜேபி பார்த்திவலா, ரவீந்தர் பாட் ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று மனுதாரர் தரப்பு வைத்த வாதத்தில், இந்த இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது. இந்திய அரசிமலைப்பு சட்டத்தின் பிரிவுகளை இந்த இடஒதுக்கீடு கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த இடஒதுக்கீட்டில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நீக்கப்பட்டு உள்ளனர்.

கேள்வி
அது அப்பட்டமான விதிமீறல். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை இவர்கள் மீறி உள்ளனர், என்று குறிப்பிட்டார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி ரவிந்தர் பாட், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் பொருளாதார ரீதியாக மக்கள் பின்னடைந்துதான் இருக்கிறார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் பலர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு கொடுக்க கூடாது. பொருளாதார ரீதியாக ஏன் இடஒதுக்கீடு வழங்க கூடாது.

விதிமீறல்
அதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் தலைமை நீதிபதி லலித் பேசுகையில், ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கும் அவர்களுக்கு கொடுக்காமல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுக்க இந்த சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வந்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதனால் அரசியலமைப்பு சட்டத்தில் இவர்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கலாம். அரசியலமைப்பு சட்டம் என்பது மாற்ற கூடியதுதான்.

என்ன தவறு இருக்க முடியும்
அதை மாற்றவே முடியாது என்று சொல்ல முடியாது. அது ஒரு ஆவணம். அதில் திருத்தங்களை செய்யலாம். பலர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் போது, அவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வரலாமே, என்று தலைமை நீதிபதியும் கேள்வி எழுப்பினார். மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பராசத், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு வேறு மாதிரியானது. ஜாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது நாம் பல காலமாக செய்த தவறுக்கான தீர்வு.

தவறானது
வரலாற்று ரீதியாக செய்யப்பட்ட தவறை சரி செய்ய கொண்டு வரப்பட்டது. அது தனி நபரை குறி வைக்கவில்லை. அது ஒரு குழுவை குறி வைக்கிறது. ஆனால் இந்த பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது தனி நபரை குறி வைக்கிறது. இதனால் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டின் நோக்கமே பாதிக்கப்படும். ஜாதி ரீதியாக மக்களை முன்னேற்றி, பாகுபாட்டை போக்கும் அந்த நோக்கமே பாதிக்கப்படும். இந்த இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, என்று வாதம் வைத்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications