அரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ, இன்று நடைபெற்ற ஜே பி நட்டா உடனான சந்திப்பிற்குப் பிறகு அரசியலில் ஈடுபடாமல் எம்பியாக தொடர்வேன் எனக் கூறியுள்ளார்

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விராவிக்கம் செய்யப்பட்டது. கடந்த 2019இல் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குப் புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவை

அதேநேரம் பல மூத்த அமைச்சர்களும்கூட அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். கொரோனாவை சிறப்பாகக் கையாள தவறிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி மூத்த அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவையில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

பாபுல் சுப்ரியோ

பாபுல் சுப்ரியோ

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "என்னைப் பல வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

அமைதியை விரும்புகிறேன்

அமைதியை விரும்புகிறேன்

அவர்கள் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன் என்ற கேள்வி எழும்? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றால் ஆம். ஓரளவுக்குத் தொடர்பு இருக்கிறது. 2014 மற்றும் 2019 க்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் அமைதியை விரும்புகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.இந்தச் சூழலில் அவர் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் எம்பியாக தொடர்வேன் என்றார்.

அரசியலில் தொடர்வேன்

அரசியலில் தொடர்வேன்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அரசியலில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அரசியலமைப்பு பதவியான எம்.பி. பதிலியில் தொடர்ந்து நீடிப்பேன். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அரசியலமைப்புப் பொறுப்பை மட்டும் நிறைவேற்றுவேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை. அரசு பங்களாவை விரைவில் காலி செய்துவிட்டு, கொல்கத்தா அல்லது மும்பைக்குக் குடியேறவுள்ளேன்" என தெரிவித்தார். அவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+