"மோடிக்கு பிடிக்கவில்லை..!" ரூ.2000 வாபஸ் ஏன்.. முன்னாள் முதன்மை செயலாளர் சொல்வதை பாருங்க
டெல்லி: ரூ. 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி இப்போது வாபஸ் பெற்றுள்ள நிலையில், இது குறித்தும் ரூ. 2000 நோட்டுகள் குறித்து பிரதமர் மோடியின் கருத்து குறித்தும் பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது அனைவருக்கும் தெரியும். அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் சுமார் 85% இந்த இரு நோட்டுகள் என்பதால் ரொக்கத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பவே சில மாதங்கள் ஆனது.
ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அப்போது தான் அறிமுகம் செய்யப்பட்டது. ரொக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க அது பெரியளவில் உதவியது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லப்பட்ட நிலையில், அதை விட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது. இதற்கிடையே சில ஆண்டுகள் கழித்து இப்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நிருபேந்திர மிஸ்ரா: ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றாலும் கூட வரும் செப். மாதத்திற்குள் அதை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பாஜக தலைவர்கள் வரவேற்ற அதேநேரம், எதிர்க்கட்சிகள் மோடி அரசு தனது தவறை இப்போது தான் உணர்ந்துள்ளதாக விமர்சித்தனர். இதற்கிடையே பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஒருபோதும் ₹2000 மதிப்பிலான ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய விருப்பமில்லை என்று நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். 2016ல் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு, இவ்வளவு பெரிய மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதைப் பிரதமர் மோடி ஒருபோதும் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் ரொக்கத்திற்குத் தட்டுப்பாடு இருந்ததால், வேறு வழியின்றி அதை வெளியிட வேண்டி இருந்ததாக நிருபேந்திர மிஸ்ரா குறிப்பிட்டார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது முதன்மை செயலாளராக இருந்தவர் தான் இந்த மிஸ்ரா. அன்றாட பயன்பாட்டிற்கு 2,000 ரூபாய் நோட்டுகள் பொருத்தமற்றதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் என்பதாலேயே பிரதமர் மோடி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி: அவர் மேலும் கூறுகையில், "சுமுகமான பரிவர்த்தனைக்காகக் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் கொண்டு வருவதையே பிரதமர் மோடி எப்போதும் ஆதரித்து வந்தார். இருப்பினும், அப்போது ரொக்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் அச்சிடும் திறன் குறைவாக இருந்ததால் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டி இருந்தது.
இதில் பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சி இல்லை. வேறு வழியில்லாமல் அரை மனதாகவே பிரதமர் மோடி இதற்கு ஒப்புக்கொண்டார்" என்று அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 2016 இல் ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், 2018-19ஆம் ஆண்டில் ₹2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் 31, 2018இல் அதிகபட்சமாக ₹6.73 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அது மெல்லக் குறைந்து ₹3.62 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications