டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராயல் சல்யூட்".. டெல்லியில் தமிழ்நாட்டு ஊர்தியை பார்த்ததுமே.. துள்ளிகுதித்து கைகளை தட்டிய பெண்.. செம

தமிழ்நாடு ஊர்தியை பார்த்ததுமே, எழுந்து நின்று கைகளை தட்டி வரவேற்றனர் பெண்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு வாகனம், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் பெண்களை போற்றி பறைசாற்றி அணிவகுத்திருந்தது, தலைநகர் டெல்லியையே கலக்கிவிட்டது.. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் தேசிய கொடிகளை ஏற்றிவைத்தனர். குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது..

டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.. இதைதொடர்ந்து அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

 ஒளவை, முத்துலட்சுமி ரெட்டி.. பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி.. டெல்லியில் கோலாகலம்! ஒளவை, முத்துலட்சுமி ரெட்டி.. பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி.. டெல்லியில் கோலாகலம்!

 ஒட்டக படை

ஒட்டக படை

வந்தே பாரத் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குழுவினர் பங்கேற்றனர். 479 கலைஞர்கள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்து மாநில ஊர்திகளும் கடமை பாதையில் அணிவகுப்பு நடத்தின... ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம்பெற்றிருந்தது காண்போரை பரவசப்படுத்தியது.. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றிருந்தனர்.. முதல்முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது..

 சாகச நிகழ்ச்சி

சாகச நிகழ்ச்சி

இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்தது விமான படையின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆரம்பமானது.. மகாராஷ்ட்ரா வாகனத்திற்கு பிறகு அணிவகுத்த தமிழ்நாடு வாகனம், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் பெண்களை போற்றி பறைசாற்றி அணிவகுத்தது... இந்த அலங்கார ஊர்தியில், சமூக வளர்ச்சி, மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது காண்போரை வெகுவாக ஈர்த்தது..

 மூவலூர் ராமாமிர்தம்

மூவலூர் ராமாமிர்தம்

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், ஒளவையார், வேலுநாச்சியார் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தன... அதுமட்டுமல்லாமல், இந்த ஊர்தியில், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார் உருவங்கங்கள் இடம்பெற்றன. சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தன....

 கைகளை தட்டி உற்சாகம்

கைகளை தட்டி உற்சாகம்

ஊர்தி அணிவகுக்கும்போது, "அன்னையும் பிதாவும் முன்னணி தெய்வம், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" என்பன வரிகள் இடம்பெற்றிருந்தன... இந்த ஊர்தி அணிவகுத்து செல்லும்போது, பார்வையாளர்கள் கைகளை தட்டி மிகவும் உற்சாகப்படுத்தினார்கள்.. பார்வையாளர்களில் இருந்த பெண் ஒருவர் எழுந்து நின்று கைகளை தட்டினார்.. தமிழ்நாட்டை சேர்ந்த ஊர்திக்கு தன்னுடைய பாராட்டையும் தெரிவித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
Excellent Video and tamilnadu vehicle exhibited in republic day in delhi republic parade
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X