"டெல்டாவின் தம்பி".. உருவானது 4 புதிய வகை உருமாறிய கொரோனா.. ஆபத்தை ஏற்படுத்தலாம்.. வார்னிங்!
டெல்லி: இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா + வகை கொரோனாவை தவிர்த்து மேலும் 4 வகை கொரோனா பரவலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா வகைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே அது பல்வேறு வகைகளாக உருமாறி வருகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போதும், உடலில் பெருக்கம் அடையும் போதும் கொரோனா வைரஸின் புரோட்டின்கள் மாற்றம் அடைகின்றன.
கொரோனாவின் புரோட்டின் மாற்றம் அடைவதால் அதன் குணங்களும், திறனும் மாற்றம் அடைகிறது. இதன் காரணமாக ஏற்படும் புதிய வகை கொரோனாவே உருமாறிய கொரோனா என்று அழைக்கப்படும். இதை வேரியண்ட் என்று அழைப்பார்கள்.

உலகம்
உலகம் முழுக்க ஏற்கனவே ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பல வகை கொரோனா உள்ளது. இதில் டெல்டா இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுக்க 80 நாடுகளில் பரவி வருகிறது. இன்னொரு பக்கம் டெல்டா + வைரஸ் (B.1.617.2.1) டெல்டாவில் (B.1.617.2) இருந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா + வகை கொரோனாவை தவிர்த்து மேலும் 4 வகை கொரோனா பரவலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கை
இந்த உருமாறிய கொரோனா வகைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா வகையின் உருமாற்றம் அடைந்த B.1.617.3 என்ற கொரோனா வகை, B.1.1.318 என்ற 14 வகை மாற்றங்களை கொண்ட கொரோனா வகை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் Lambda வகை கொரோனா, டெல்டாவில் இருந்து பிரிந்து உருவான B.1.617.1 எனப்படும் கப்பா வகை கொரோனா ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்டா
இதில் B.1.617.3 என்ற வகை டெல்டாவின் தம்பி ஆகும். B.1.617.3 வகையும், 14 மாற்றங்களை கொண்ட B.1.1.318 என்ற வகையும் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. Lambda வகை இன்னும் இந்தியாவில் பரவ தொடங்கவில்லை. மகாராஷ்டிராவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனாதான் டெல்டா, கப்பா உள்ளிட்ட வகைகள் தோன்றவும் காரணமாக இருந்தது. B.1.617.3 வகை கொரோனாவிற்கு புதிய பெயர் வைக்காமல், இதை கப்பாவிற்கு கீழ் உலக சுகாதார மையம் வகைப்படுத்தி உள்ளது.

B.1.617.3
இந்த புதிய வகை B.1.617.3 கொரோனா இந்தியாவில் 148 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 3083 பேருக்கு கப்பா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி பல புதிய வகை கொரோனா ஏற்படுவதால் அதிக பேர் பாதிக்கப்படலாம், மக்கள் இடையே கொரோனா அதிகம் பரவலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கை
அதேபோல் இந்த உருமாறிய கொரோனா மேலும் பல வகையாக உருமாற்றம் அடையும் ஆபத்தும் உள்ளது. போதிய வேக்சின் போடாததால் தொடர்ந்து இந்த புதிய வகைகள் பரவும். இது மேலும் கேஸ்களை அதிகரிக்கும். இது மேலும் பல புதிய வகை கொரோனாவை உருவாக்கும் ஆபத்தும் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications