துணி மாஸ்க் உள்ளே ஊடுருவி ஓடி வரும் ஓமிக்ரான்.. நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாதிரியான மாஸ்க்குளை பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
கொரோனாவின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா 3ஆவது , 4 ஆவது அலையை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஓமிக்ரான் பரவல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 21 நாட்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஓமிக்ரான்
இரு தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டாலும் ஓமிக்ரான் கட்டுக்குள் வரவில்லை என்பதால் மாஸ்க், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மாஸ்க் எனும் போது கொரோனா முதல் அலை முதல் துணி மாஸ்க்குகள் பிரபலமடைந்தன.

பனியன் துணி
ஏழை எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் புதிய புதிய மாஸ்க்குகளை வாங்க இயலாது என்பதால் பனியன் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகள் விற்பனை செய்யப்பட்டன. இவை பல வண்ணங்களில் கிடைக்கப் பெற்றன. இதன் வரவேற்பை பார்த்து பெரிய ஆடை நிறுவனங்களும் வேட்டி, சேலைகளுக்கு மேட்சிங்காக மாஸ்க்குகளை தயாரித்து வந்தன.

மாஸ்க்
வசதியுடையவர்கள் என் 95 மாஸ்க்குகளை அணிந்தனர். இந்த மாஸ்க்குகளை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா முன்களப் பணியாளர்கள் அணிந்தால் போதும் மற்றவர்கள் அணிய தேவையில்லை என்றனர். இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது இரட்டை மாஸ்க்குகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

இரட்டை லேயர்கள்
இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் போது இரட்டை அல்லது மூன்று லேயர்களை கொண்ட மாஸ்க்குகள் மிகவும் செயல்திறன் மிக்கவை. ஆனால் துணி மாஸ்க்குகள் வெறும் அலங்கார பொருளாகவே இருக்கும். அதன் மூலம் ஓமிக்ரான் ஊடுருவ அதிகம் வாய்ப்புள்ளது. வாய் மற்று்ம மூக்கையும் மூடியிருக்கும்படி மாஸ்க்குகளை அணிய வேண்டும்.
Recommended Video

துணி மாஸ்க்
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மாஸ்க்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. எனவே துணி மாஸ்க், என் 95 மாஸ்க் , பில்ட்ரேஷன் இருக்கும் மாஸ்க்குகளை அணிய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். சர்ஜிக்கல் மாஸ்க்குகளை அணியலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications