தேர்வு அறைக்கு மாணவர்கள் முகக்கவசம், சேனிட்டைசர் கொண்டு வரலாம்.. சிபிஎஸ்இ அதிரடி அனுமதி
டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது, இதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ், சீனாவில் மிக வேகமாக பரவியது. அந்த உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அந்த அளவுக்கு இப்போது பரவா விட்டாலும் கூட, தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு இப்போது எடுக்க தொடங்கிவிட்டது.
ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை, தவிர்ப்பதாக, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அறிவித்து விட்டனர். இதேபோல பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
இதனிடையே சிபிஎஸ்இ தேர்வு இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், முகக் கவசங்கள் அணிந்து கொள்ளலாம், சானிடைசர்களை கொண்டுவரலாம். இதெல்லாம் அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது. இதற்கு இடையூறு செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
தேர்வு நேரங்களில் அதிகப்படியான சோதனைகள் மேற்கொள்ளப்படும் வழக்கம். அப்படி இருந்தும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக முக கவசம் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications