டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. மார்க் போட்டு தூக்கிய மார்க்.. இதுதான் காரணம்!

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டு உள்ளது என்று சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. அதிபர் டிரம்ப் தேர்தலில் நின்ற போது, அவருக்கு ஆதரவான கட்டுரைகளை பேஸ்புக் மக்களிடம் அதிகம் கொண்டு சென்றது.

இதற்கு பின் ரஷ்யா இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது ஒரு வகையில் நிரூபிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

இந்த நிலையில் பேஸ்புக் கடந்த வருடமே இதுகுறித்து முக்கிய விஷயம் ஒன்றை தெரிவித்து இருந்தது. அதன்படி இனி எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்கும். பேஸ்புக்கில் முறையின்றி இயங்கும் கணக்குகள் முடக்கப்படும். தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான கணக்குகள், பக்கங்களை முடக்குவோம் என்று பேஸ்புக் கூறியது.

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீச்சு.. அதிமுக நிர்வாகி காயம்ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீச்சு.. அதிமுக நிர்வாகி காயம்

இங்கும்

இங்கும்

இந்த நிலையில்தான் தற்போது இந்தியாவில் தேர்தலை முன்னிட்டு நிறைய பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 1000 பேஸ்புக் கணக்குகள் வரை முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

மோசம்

மோசம்

இந்த பக்கங்கள் பல பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், தவறான போலி கணக்குகளை கொண்டு இருந்ததாகவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது.

பாஜகவிற்கும்

அதேபோல் பாஜகவினருக்கு சொந்தமான சில பக்கங்களும் முடக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை எந்தெந்த பக்கங்கள் என்று முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பாஜகவினர் இதுகுறித்து டிவிட்டரில் வருத்தப்பட்டு போஸ்ட் போட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook blocks nearly 700 Pages related to Congress party ahead of Lok Sabha Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X