டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தாக்கம்: நடப்பு நிதி ஆண்டை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கிறதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பால் நடப்பு நிதி ஆண்டு கால வரையறையை ரிசர்வ் வங்கி மாற்றி அமைப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இருக்கிறதா?

Recommended Video

    RBI has reduced the Cash Reserve Ratio by 100 basis points.

    கொரோனா பாதிப்பை முன்வைத்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. இதில் ஒன்றுதான் நடப்பு நிதி ஆண்டு காலத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கப் போகிறது என்பதும்.

    Fake: RBI did not reset its financial year due to coronavirus

    பொதுவாக நிதி ஆண்டு என்பது ஏப்ரல் முதல் மார்ச் வரை கடைபிடிக்கப்படும். ஆனால் 2020-21 நிதி ஆண்டு என்பது ஜூலை தொடங்கி ஜூன் மாதம் வரையிலானது என மாற்ற ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருக்கிறது என்பதுதான் வலம் வந்த செய்தி.

    கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து இத்தகைய செய்தி பரவியது. உண்மையில் இது ரிசர்வ் வங்கியின் பழைய பரிந்துரை. கொரோனாவை முன்வைத்து பரிந்துரைக்கவில்லை.

    கொரோனா.. உங்கள் வாட்ஸ்அப், செல்போன் அழைப்புகளை கண்காணிக்கிறதா அரசு? நிஜம் இதுதான்கொரோனா.. உங்கள் வாட்ஸ்அப், செல்போன் அழைப்புகளை கண்காணிக்கிறதா அரசு? நிஜம் இதுதான்

    கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இதுபோன்ற ஒரு செய்தி குறித்து ரிசர்வ் வங்கி கருத்துகளை வெளியிட்டுள்ளது. அதாவது சர்வதேச பொருளாதார சவால்கள், நெருக்கடிகளின் அடிப்படையில் நிதி ஆண்டை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதனடிப்படையில்தான் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததே தவிர கொரோனா பாதிப்பின் அடிப்படையில் இப்படி ஒரு பரிந்துரை அனுப்பப்படவில்லை எனபதை புரிந்து கொள்ள வேண்டும்.

    English summary
    Is it true that the Reserve Bank of India reset its financial year owing to the coronavirus outbreak?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X