இந்திய பங்குச் சந்தையை 'சூறையாடி விளையாடிய' இரு பெண்கள்- மாதவி புரி புச், சித்ரா ராமகிருஷ்ணா!
டெல்லி: இந்திய பங்குச் சந்தைகளை அதிகாரத்தைப் பயன்படுத்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் தலைவரான மாதவி புரி பிச் சூறையாடிய முறைகேடுகளை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேசிய பங்குச் சந்தை நிஃப்டியையும் வெளியே தெரியாத மர்ம நபர்கள் சூறையாடிய உடந்தையாக இருந்ததாக அதன் முதலாவது பெண் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்திய பங்குச் சந்தைகள் எப்போதும் சர்ச்சைக்கும் பேரிழப்புகளுக்குமான இடமாகவே இருந்து வருகிறது. 'மூல' அம்பானி (இன்றைய அம்பானிகளின் அப்பா) காலம் முதல் ஹர்ஷத் மேத்தா, சித்ரா ராமகிருஷ்ணன் தொடங்கி இன்றைய மாதவி புரி பிச் வரை 'பந்தாடப்பட்ட' பொருளாகவே பங்குச் சந்தை இருந்து வருகிறது. அதிலும் பங்குச் சந்தை தொடர்பான முதன்மை பதவிகள் வகித்த பெண்களான சித்ரா ராமகிருஷ்ணனும் மாதவி புரி புச்சும் 'ஆடிய' ஆட்டங்கள்தான் இப்போது எல்லோரையும் தலைகிறுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியின் முதலாவது பெண் இயக்குநர்தான் சித்ரா ராமகிருஷ்ணன். தேசிய பங்குச் சந்தையின் ரகசியங்கள் அனைத்தையும் ஏதோ ஒரு இமயமலை சாமியாருக்கு 'கடைவிரித்து' விளையாடியவர்தான் சித்ரா ராமகிருஷ்ணன். இதனால் பல்லாயிரம் கோடியை சோ கால்ட் இமயமலை சாமியார் எனும் மர்ம ஆசாமிகள் அள்ளிக் குவிக்க வெளிநாடுகளில் துள்ளித் திரிந்தார் சித்ரா. ஒருவழியாக சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணியவர்; தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்திலும் வசமாக பிடிபட்டவர் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ராவின் சித்து விளையாட்டுகளை ஏதோ சில சக்திகள் பரபரப்பாக்காமலேயே பம்மிக் கொண்டிருந்தன.
இப்போது சிக்கியிருப்பவர் மாதவி புரி பிச். இந்திய பங்குச் சந்தையை இப்போது முறைகேடாக பயன்படுத்தி வரும் அதானி குழுமத்தின் பல நூறு வெளிநாட்டு பொலி கம்பெனிகளில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவரது பெயரிலும் ஏராளமான பங்குகள் இருந்தன என அம்பலப்படுத்தி இருக்கிறது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை. இதனை மாதவி புரி புச், அவரது கணவர் மறுத்துள்ளனர்தான். ஆனால் கடந்த பல ஆன்டுகளாக அதானி குழுமத்துடன் எப்படி எல்லாம் மாதவி புரி புச் நெருக்கமாக இருந்து ஆதாயமடைந்தார் என ஆதாரங்களை அல்லவா அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும் இனிவரும் நாட்களில் இந்த விவகாரம் பெரும் புயலாய் வெடிக்கத்தான் போகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications