சீன எல்லையில் மாயமான விமானம்.. பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர்.. உறவினர்கள் பிரார்த்தனை
டெல்லி: சீன எல்லையில் மாயமான ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர் என தெரியவந்தது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மிகவும் சிறிய ரக விமானம் ஆகும். இதில் 25 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த விமானங்கள் உணவு பொருள் எடுத்துச் செல்வதற்கும், மலை பாங்கான பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

விமானங்கள் தேடல்
மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் சீன எல்லை அருகே உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 2 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

13 பேரில் ஒருவர்
காணாமல் போன விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரது விவரங்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

பாட்டியாலா
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (27) என்பது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்த மோகித்தின் தந்தை சுரீந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

மனைவி வங்கி அதிகாரி
மோகித்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. ஜலந்தரை சேர்ந்த அவரது மனைவி வங்கி அதிகாரியாவார். மோகித் நலமுடன் இருக்க அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications