Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையில் பரபரப்பு! யூடியூப் பிரபலம் வீட்டில் துப்பாக்கி சூடு! 30+ குண்டுகள் பாய்ந்ததால் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் பிரபல யூடியூபரும் பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் என்பவரது வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. முகமூடி அணிந்து வந்த 3 பேர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் பரபர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள குருகிராமில் வசிப்பவர் பிரபல யூடியூபர் மற்றும் இந்தி பிக் பாஸ் வெற்றியாளருமா எல்விஷ் யாதவ். இவரது வீட்டில் தான் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Famous Youtuber Elvish Yadav s Gurugram House Attacked Over 2 Dozen Bullets Fired by Bike-Borne Men

துப்பாக்கிச் சூடு

செக்டர் 57-ல் உள்ள யாதவின் வீட்டிற்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், 20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். குண்டுகள் வீட்டின் தரை மற்றும் முதல் தளங்களில் பாய்ந்துள்ளது.. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் வசிக்கும் எல்விஷ் யாதவ், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

அவருடைய உதவியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வீட்டிற்குள் இருந்தனர். இருப்பினும், யாருக்கும் எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் தகவல்

இது குறித்து குருகிராம் காவல்துறை அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், "குருகிராம் செக்டர் 57ல் உள்ள யூடியூபர் மற்றும் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. ஏகப்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் எல்விஷ் யாதவ் தனது வீட்டில் இல்லை" என்று கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆதாரங்களைச் சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தாரிடம் இருந்து முறையான புகார் பதிவு செய்யப்பட்டவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Famous Youtuber Elvish Yadav s Gurugram House Attacked Over 2 Dozen Bullets Fired by Bike-Borne Men

என்ன நடந்தது

இது தொடர்பாக எல்விஷ் யாதவின் தந்தை கூறுகையில், "இதற்கு முன்பு எங்களுக்கு எந்தவொரு கொலை மிரட்டலோ அச்சுறுத்தலோ வந்ததில்லை.. இப்போது எல்விஷ் யாதவ் ஹரியானாவில் இருக்கிறார். தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியபோது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். மூன்று முகமூடி அணிந்த நபர்கள் இருந்தனர்.

ஒருவர் பைக்கில் உட்கார்ந்திருக்க, மற்ற இருவரும் இறங்கி வீட்டை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுமார் 25 முதல் 30 ரவுண்டுகள் சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்திற்கு முன்பு எல்விஷுக்கு எந்த அச்சுறுத்தலும் வரவில்லை" என்றார்.

யார் இந்த எல்விஷ் யாதவ்

27 வயதான எல்விஷ் யாதவ், ஒரு யூடியூபராக புகழ்பெற்றவர். பின்னர் 2023-ல் பிக் பாஸ் OTT 2ல் கலந்து கொண்டு வென்றார். அவருக்கு வடஇந்தியாவில் ஆன்லைனில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம்.. மேலும் அவர் பல இசை வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதேநேரம் எல்விஷ் யாதவ் இதற்கு முன்பு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு ரேவ் பார்ட்டிகளில் பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் நொய்டா போலீசார் அவரை கைது செய்தனர். கோப்ரா விஷம் போதைப்பொருளாக வழங்கப்பட்டதாகவும், இதற்கு யாதவ் ஏற்பாடுகளைச் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+