14 ஆண்டுக்கு முன் இறந்தவரால் போர் செய்ய முடியுமா? அக்ஷய் குமார் படத்தில் வரலாற்று திரிபு என புகார்
டெல்லி: அக்ஷய் குமார் நடித்த பேரரசர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான சாம்ராட் பிருத்விராஜில் வரலாற்று பிழையான தகவல்கள் இடம்பெற்று உள்ளதாக விமர்சனம் எழுந்து உள்ளது.
இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி இயக்கிய இந்திய மன்னர் பிருத்விராஜ் சௌகானின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "சாம்ராட் பிருத்விராஜ்" இல் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு பாஜக ஆளும் 3 மாநிலங்கள் வரிச்சலுகை வழங்குவதாக
அறிவித்து இருந்தன.

சாம்ராட் பிருத்விராஜ்
நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தார் அக்ஷய் குமார். அப்போது ஒரு நேர்காணலில் பேட்டியளித்த அவர், "பாடபுத்தகங்களில் முகலாய மன்னர்கள் குறித்தே அதிக அளவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்து மன்னர்கள் குறித்து குறைவாகவே பாடபுத்தகங்களில் உள்ளது.

இந்து மன்னர்கள்
இந்து மன்னர்களின் வரலாறுகளையும், முகலாயர்களுக்கு இணையாக கல்வி அமைச்சகம் பாட புத்தகங்களில் சேர்த்திட வேண்டும். இந்திய அரசர்களை பற்றி வரலாற்று புத்தகங்களில் யாரும் எழுதவில்லை. அவர்கள் குறித்து நாம் எழுத வேண்டும். முகலாயர்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால், இந்திய மன்னர்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு திரைப்படத்தை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், 2014-ல் தான் கலாச்சார மறுமலர்ச்சிக்கான சகாப்தம் தொடங்கியது.

படையெடுப்புகள்
சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்திய கலாச்சாரம் பெண்களை மதிக்கக்கூடியது. அவர்களின் வளர்ச்சிக்கு உதவியது. இந்த கதை ஆப்கானிஸ்தான் முதல் டெல்லி வரை பல போர்களில் கலந்துகொண்ட நாயகன் பற்றியது. நூற்றாண்டுகளாக படையெடுப்புகளுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது." என்றார்.

என்ன சர்ச்சை?
இந்த நிலையில், சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் வரலாறு திரிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. பேரரசர் பிருத்விராஜ் சவுகான் ஆப்கானிஸ்தானின் சுல்தான் முஹம்மது கோரியை கொன்றதாக அதில் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆனால் உண்மையில் முஹம்மது கோரிக்கு முன்னதாகவே, அதாவது 1192 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவே வரலாற்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முஹம்மது கோரி 1206 ஆம் ஆண்டுதான் உயிரிழந்தார் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

விமர்சனம்
இந்திய மன்னர்களின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும் என பேசிய அக்ஷய் குமார் நடித்த படத்திலேயே இப்படி ஒரு வரலாற்று பிழை இருப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக மீம்களும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோல் ஒரு மீமை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒலிம்பிக் வென்ற இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் "இது உண்மைதானா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications