இந்தியாவில் கால் பதித்த குரங்கு அம்மை! அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
டெல்லி: இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பாக முன்னர் சந்தேகிக்கப்பட்ட நபர், மேற்கொண்ட பயணத்தால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பதை ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் கால் பதித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் தொடர்பாக முன்னர் சந்தேகிக்கப்பட்ட நபர், மேற்கொண்ட பயணத்தால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பதை ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் பதிவான 30 பேருக்கான பாதிப்பைப் போன்று தற்போதைய ஒருவரும் தனிமைப்படுத்தப்படக் கூடிய நோயாளியாவார். இது தற்போதைய பொது சுகாதார அவசரநிலையின் ஒரு பகுதியாக உள்ள குரங்கு அம்மை நோயின் கிளேட் 1 தொடர்பானது இல்லை.

பாதிக்கப்பட்டுள்ள ஆண், அண்மையில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நாட்டுக்குப் பயணம் செய்துள்ளார். தற்போது அவர், தன்னிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ ரீதியாக அவர் நலமுடன் இருக்கிறார். எந்தவொரு இணை நோயாலும் அவர் பாதிக்கப்படவில்லை. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தொடர்பை அறிதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நோய் பெருமளவு பரவி ஆபத்தை விளைவிப்பதற்கான சூழல் ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.
சரி, குரங்கு அம்மை பாதிப்பு என்பது என்ன? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்?
குரங்கு அம்மை பாதிப்பின் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்)
- தலைவலி, தசைபிடிப்பு,
- உடல் சோர்வு,
- தொண்டை புண் மற்றும் இருமல்
- கண் வலி அல்லது பார்வை மங்குதல்
- மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்,
- உணர்வு மாற்றம், வலிப்பு
- சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்
குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்:
- ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
- பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்
நோய் பரவுதல்
- நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.
- உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும் உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறிய முடியாத பொருள்களிலிருந்து மறைமுகமாகவும் இது பரவக்கூடும்
குரங்கு அம்மை நோய் பரவும் தொற்று காலம்
- சொறி ஏற்படுவதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு வரை அனைத்து சிரங்குகளும் விழும் / குறையும் வரை
குரங்கு அம்மை பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- நீங்களோ / உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
- நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்
- தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்
- நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்
அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications