இன்று விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்... நாடு முழுவதும் பெருகும் ஆதரவு..!
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த பட்டினிப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத் தலைவர் குருநாம் சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என அவர் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் ஒரு புறம் நடைபெற்றாலும் வழக்கம் போல் தர்ணா போராட்டமும் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே அனைத்து மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு வரவேண்டும் என கடந்த வாரம் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் போக்குவரத்து வசதி, பொருட்செலவுக்கு பணம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் டெல்லிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட தலைநகரங்களிலேயே அந்தந்த பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு அதிதீவிரம் காட்டி வருகிறது. விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது தொடர்பாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், தாமும் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications