டெல்லி சலோ.. 3000 டிராக்டர்கள்..பஞ்சாப், ஹரியானாவில் இருந்து திரண்டு வரும் விவசாயிகள்.. 144 தடை அமல்
டெல்லி: பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்து 3,000 டிராக்டர்களில் வந்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் விவசாயிகள் நுழைவதை தடுக்கும் வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் கூட்டங்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை பிப்ரவரி 13ஆம் இந்த போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவிவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பஞ்சாபில் இருந்து 2,000 டிராக்டர்கள், உ.பி.யில் இருந்து 500, ராஜஸ்தானில் இருந்து 200 டிராக்டர்களில் வந்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த நடவடிக்கைகளை முறியடிக்க பாஜக ஆளும் ஹரியானா அரசு அதிக தீவிரம்காட்டி வருகிறது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும், இதற்காக அவர்கள் டிராக்டர்களுடன் பலமுறை ஒத்திகை பார்த்ததாகவும் மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் சண்டிகரில் கடந்த 8ஆம் தேதி முதல் கட்டமாக விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை துவங்கினர்.
#WATCH | Ambala, Haryana: Shambhu border sealed ahead of the farmers' call for march to Delhi on 13th February. pic.twitter.com/9jbrddosnV
— ANI (@ANI) February 12, 2024
இந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்பெறவும், போலி விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த
டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications