டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்- மோடி உருவபொம்மைகள் எரிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் பிரதமர் மோடியின் உருவபொம்மைகளையும் எரித்தனர்.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

கறுப்பு கொடிகள் ஏற்றம்

கறுப்பு கொடிகள் ஏற்றம்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் இந்த அழைப்புக்கு திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனடிப்படையில் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் வீடுகள், வாகனங்களில் கறுப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

மேலும் சென்னையில் சிபிஎம் கட்சி அவலுலகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டன. டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கறுப்பு கொடிகளுடன் இன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.

பெண்கள் போராட்டம்

பெண்கள் போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் பல கிராமங்களில் விவசாயிகள் கறுப்பு கொடிகளுடன் போராட்டங்கள் நடத்தினர். பல இடங்களில் பெண்கள், இந்த கறுப்பு கொடி போராட்டங்களுக்கு தலைமை வகித்தனர். நாங்கள் போராடுவோம்; நாங்கள் வெல்வோம் என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

கமல் ஆதரவு ட்வீட்

கமல் ஆதரவு ட்வீட்


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர், விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

English summary
Farmers observe Black Day against the Centre's Agri Laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X