வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - ஜனவரி 30ல் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அழைப்பு

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதியன்று நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் நினைவு தினமான வருகிற 30 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அமைதியான முறையில் ஜனவரி 30 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் விவசாயிகள்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 400 போலீசார் காயமடைந்தனர். செங்கோட்டையில் விவசாய கொடிகள் ஏற்றப்பட்டன. டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.

 Farmers’ Protest Delhi: Farmers to observe Jan 30 as Sadbhavna Diwas

போராட்டத்தை முன்னின்று நடத்தும் விவசாய சங்கத் தலைவர்கள் காவல்துறையில் ஆஜராக வேண்டும் என போலீசார் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த விவசாய சங்கங்கள் ஒற்றுமையாக நின்று போராட்டத்தை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளன.

விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், பேசுகையில், உயிரே போனாலும் போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் என்று கண்ணீர் மல்கக் கூறியது விவசாயிகளை மேலும் உணர்வுகளை தூண்டி விட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் மீண்டும் சாரைசாரையாக போராட்டக் களத்திற்கு வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் பக்கமிருந்து கல்வீசி தாக்குதல் நடப்பதாகவும் கூறப்பட்டது. முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு கோஷமிட்டபடி வந்த சிலர், காவல்துறை முன்னிலையிலேயே, விவசாயிகள் தங்கியுள்ள கூராடங்களை சேதப்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது.

இந்த அடாவடியில் ஈடுபட்டது பாஜக குண்டர்கள் என விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்கள் கிடையாது. முகத்தை மறைத்துக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக கூறுகின்றனர்.

முகமூடி அணிந்தபடி தாக்குதல் நடத்துவது பாஜக ஆதரவாளர்களுக்கு புதிது இல்லை. அரசுக்கு எதிராக எந்த போராட்டம் என்றாலும், முகத்தை மூடிக்கொண்டு திட்டமிட்ட தாக்குதல் நடத்துவது பாஜகவினரின் வேலையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே அறிவித்தபடி, பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை சில விவசாய சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் நினைவு தினமான வருகிற 30 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் ஏக்தா மோர்ச்சா (KEM) சங்கத்தலைவர் யுத்வீர் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜனவரி 30 ஆம் தேதி உண்ணாவிரதத்தை கடைப்பிடிப்பதில் முழு நாடும் தங்களுடன் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சத்பவனா திவாஸ் என்ற பெயரில் ஜனவரி 30 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் விவசாயிகள் சங்கத்தலைவர் யுத்வீர் சிங் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த தடைகளை நீக்க என்று மற்றொரு விவசாய சங்கத்தலைவர் தர்சன் பால் கூறியுள்ளதத.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+