டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிக்கள் உள்ளிட்ட குழு தடுத்து நிறுத்தம்!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.க்களை உள்ளடக்கிய எதிர்க்கட்சி குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளான காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் போராட்டம் தொடருகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடிக்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு சிறப்பு பேருந்து ஒன்றில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்றது.

இந்த குழுவில் தமிழக எம்.பிக்களான கனிமொழி, திருச்சி சிவா, சு. வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த எம்.பிக்கள் அனைவரையும் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக 2 கி.மீ. தொலைவிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Delhi: Opposition leaders who have reached Ghazipur border to meet the protesting farmers have been stopped by Police. pic.twitter.com/SDsZNJNPvF
— ANI (@ANI) February 4, 2021
இதனால் அங்கு போலீசாருடன் எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த முள்வேலி பகுதிகளிலேயே நின்று முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

இதனிடையே காசிப்பூர் எல்லையில் போலீசாரின் தடுப்புகளை விவசாயிகளே அகற்றியும் வருகின்றனர். இதனால் காசிப்பூர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications