Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சிவந்த' டெல்லி.. மோடி + அதானி = மோதானி.. மத்திய அரசுக்கு எதிராக முழங்கிய விவசாயிகள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு உட்பட மூன்று அமைப்புகள் சேர்ந்து டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தியிருக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 10,881 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தற்கொலைகளில் 6.6 சதவிகிதமாகும். தற்கொலை செய்துக்கொண்ட இந்த 10,881 பேரில் 5,318 பேர் விவசாயிகள், 5,107 பேர் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த தற்கொலை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே மகாராஷ்டிரா கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

இதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் குறைந்தபட்ச ஆதார விலை(சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில்), கடன் பிரச்னை, இயற்கை பேரிடர் இழப்பீடு போன்றவைதான் அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது. தொழிலாளர்களை பொறுத்த அளவில் குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்கப்பட வேண்டும், அனைத்து தொழிலளார்களுக்கும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

மூன்று அமைப்புகள்

எனவே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலளார்களை இந்த கோரிக்கையின் கீழ் இணைத்து இந்திய தொழிற்சங்க மையம் (CITU), அகில இந்திய விவசாயிகள் சங்கம்(AIKS), அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) ஆகிய மூன்று சங்கங்களும் தலைநகர் டெல்லியில் பேரணி நடத்தியுள்ளன. இந்த பேரணிக்காக கடந்த 6 மாத காலமாக இம்மூன்று சங்கங்களும் கிராமங்கள் தோறும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களையும் நகரங்களில் தொழிலாளர்களையும் பிரசாரங்கள், போராட்டங்கள், மனு கொடுக்கும் இயக்கங்கள் என பல வழிகளில் அணி திரட்டி இருக்கின்றன.

Farmers rally on behalf of three organizations including CITU, AIKS in Delhi against the central BJP government

பிரமாண்ட பேரணி

இதன் தொடச்ச்சியாதான் தற்போது டெல்லியில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கான தொடங்கி, அசாம், மேற்கு வங்கம் முதல் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் வரை அனைத்து மாநில விவசாயிகளும் பங்கேற்றிருக்கின்றனர். இந்த பேரணிக்கும், பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் ஆகியோர் தலைமையேற்றனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மதுரை எம்பி சு.வெங்கடேசன், கோவை எம்பி நடராஜன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மோடி+அதானி

பொதுக்கூட்டத்தில் உரையாற்றி அசோக் தாவ்லே, "கொரோனா தொற்று நோய் பாதிப்பின் போது மருத்துவமனைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்தனர். மறுபுறம் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு 'மோதானி' (மோடி+அதானி) அரசின் கடமையாகும். ஒருவேளை சரிசெய்ய முடியாவிடில் இவர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர் பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக காந்தி விடுத்த எச்சரிக்கையை இப்போது நாங்கள் இந்த அரசுக்கு எதிராக விடுக்கிறோம்.

Farmers rally on behalf of three organizations including CITU, AIKS in Delhi against the central BJP government

பொருளாதார நெருக்கடி

நாடு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கண்ணிமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஆனால் இந்த பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப வெறுப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதி, மத மற்றும் இன மோதல்கள் மூலம் மக்களை பிஸியாக வைத்திருக்கொண்டிருப்பதான் மூலம் பாஜக அரசு தங்கள் செயல்பாடுகளை தீவிரமாக நிறைவேற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.

Farmers rally on behalf of three organizations including CITU, AIKS in Delhi against the central BJP government

ஏகபோகம்

இவரைத் தொடர்ந்து பிரபாத் பட்நாயக் கூறுகையில், "விவசாயிகளை பெரும் கார்ப்ரேட்கள் நசுகின்றன. இங்கு 10-20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கூட லாபம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் இவர்களை விட 100-10,0000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கார்ப்ரேட்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக நாசம் செய்துவிடுகிறார்கள். 10-20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலைமையே இப்படி இருக்கும்போது அதற்கும் கீழ் நிலம் வைத்திருப்பவர்கள், விவசாய கூலி தொழிலாளர்களின் நிலமை என்னவாகும்? எனவே வேளாண் துறையில் ஏகபோகம் உடனடியாக உடைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+