இந்திய கடற்படையில் இம்பால் - 'ஸ்டெல்த் தொழில்நுட்பம்' மூலம் ஏவுகணை அழிப்பு-10 முக்கிய அம்சங்கள்!
டெல்லி: இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்படும் இம்பால் ஒய் 12706 போர்க் கப்பலானது ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலாகும்.
இந்திய கடற்படையின் புதிய வரவாக இன்று இணைகிறது இம்பால் ஒய் 12706 போர்க் கப்பல். இந்தக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கடற்படையில் இணைக்கிறார்.

இம்பால் ஒய் 12706 போர்க் கப்பலின் 10 முக்கிய அம்சங்கள்:
நான்கு 'விசாகப்பட்டினம் கிளாஸ்' அழித்தொழிப்பு போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பல் இம்பால் ஒய் - 12706. 'போர்க்கப்பல் திட்டமான '15 பி திட்டத்தின்' கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்ட அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் மூன்றாவது கப்பல் 12706 (இம்பால்).
ரகசியமாக ஊடுருவும் ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் இம்பால் ஒய் - 12706.
இம்பால் ஒய் - 12706 வடகிழக்கு நகரமான இம்பால் என பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல். இதற்கான ஒப்புதல் 2019 ஏப்ரல் 16 அன்று ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. ஏப்ரல் 2019 இல் இம்பால் என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அக்டோபர் 20, 23 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது
களமிறங்கும் கடல் ராசா!.. கடற்படைக்கு வலு சேர்க்கும் ஐஎன்எஸ் இம்பால்.. இனி நம்ம ராஜ்ஜியம்தான்
வடகிழக்கு பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் செழிப்பின் முக்கியத்துவத்தை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.
துறைமுகத்திலும் கடலிலும் கடுமையான மற்றும் விரிவான சோதனை திட்டத்தை முடித்த பின்னர் 20 அக்டோபர் 2023 அன்று இம்பால் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
2023 நவம்பரில், நீட்டிக்கப்பட்ட தூர சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
கப்பலின் சின்னம் 2023 நவம்பர் 28 அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பிற மூத்த பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
ஐ.என்.எஸ். இம்பால் மேற்கு கடற்படை கட்டளையில் இணைக்கப்படும்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, எம்.எஸ்.எம்.இ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பொது மற்றும் தனியார் துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் எம்.டி.எல் உருவாக்கிய ஒரு அதிநவீன போர்க்கப்பல் இம்பால்.
இந்தப் போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியக் கடற்படையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. மிகக் குறைந்த நேரத்தில் தனது கடல்சார் சோதனைகளை உருவாக்கி, நிறைவேற்றிய முதல் உள்நாட்டு அழிப்புக் கப்பல் ஆகும்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications