ஹீரோயினா ஆக்குறேன்! கும்பமேளா பெண்ணிற்கு வாய்ப்பு வழங்கி கவனம் பெற்ற இயக்குநர் பாலியல் வழக்கில் கைது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாசி மணி விற்பனை செய்த பெண்ணான மோனாலிஸா போஸ்லோவை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று பாலிவுட் திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா வாக்கு கொடுத்திருந்தார். இது தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
28 வயது இளம்பெண்ணை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று சொல்லி பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததகாவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

45 வயதான மிஸ்ரா, 28 வயது இளம் பெண்ணை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று சொல்லி சுமார் 4 ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று புகார் பதிவாகியிருக்கிறது. சாதாரண பின்புலத்திலிருந்து வந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, தனது தேவைகளுக்கு அவர் பயன்படுத்திக்கொண்டாக புகார் பதியப்பட்டிருக்கிறது.
மும்பையில் சில ஆண்டுகள் லிவிங் உறவில் இருக்க இளம்பெண் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இப்படி இருந்தபோது சுமார் 3 முறை கருகலைப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கை டெல்லியின் நபி கரீம் போலீஸ் விசாரித்து வந்தது. பாலியல் வன்முறை, தாக்குதல், கருக்கலைப்பு, மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸ், CrPC பிரிவு 164 கீழ் ஆதாரங்களை உறுதி செய்திருக்கின்றனர். முசாபர்நகர் மருத்துவமனைகளில் கரு கலைப்பு நடந்ததற்கான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர்.
நபி கரீம் பகுதியில் உள்ள Hotel Shiva-வில் வைத்து இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். எல்லாவற்றையும் செய்த பின்னர், இளம்பெண்ணை கழற்றிவிட மிஸ்ரா முடிவெடுத்திருக்கிறார். இதனையடுத்து போலீஸ் இயக்குநரை கைது செய்திருக்கின்றனர். முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மிஸ்ரா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமீன்
திரையுலகில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. ஏராளமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த சர்ச்சையில் கைதாகியிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது சினோஜ் மிஸ்ராவின் கைது பேசு பொருளாகியிருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் நடிகைக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மொத்த திரையுலகமும் திரண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications