முத்தலாக் முறை ஒழிப்பு! பெண்களின் கண்ணியம் காக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் பெண்கள் நலனில் எந்தளவுக்கு அரசு அக்கறை செலுத்தியது என்பது குறித்தும் பேசினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 28% அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமை பொங்க கூறினார். அதேபோல் ஸ்டெம் கோர்ஸ் எனப்படும் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங், கெமிக்கல் இஞ்சினியரிங், உள்ளிட்ட இன்னும் பல அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவிகளின் சேர்க்கை 43% உயர்ந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய ஹைலைட் என்னவென்றால் இது உலகளவில் இது மிக உயர்ந்த சதவீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்ததாக கூறியுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு, பெண்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 70% வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது என பல நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் முத்தலாக் முறையை சட்டவிரோத நடவடிக்கையாக மாற்றியது பற்றியும் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
முத்தலாக் முறை ஒழிப்பு என்பது கோடிக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் உறுதி செய்யும் என ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட் தாக்கல் உரையில் முத்தலாக் ஒழிப்பு குறித்து மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications