"நானும் மிடில் கிளாஸ்தாங்க! எல்லா பிரச்சினையும் தெரியும்!" பட்ஜெட்டுக்கு முன் நிர்மலா சீதாராமன் பரபர
டெல்லி: வரும் பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு இந்த ஆண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இந்தாண்டு பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
இதனிடையே இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் மிடில் கிளாஸ் மக்கள் சந்தித்து வரும் அழுத்தங்கள் தனக்குத் தெரியும் என்றும் மத்திய பாஜக அரசு மிடில் கிளாஸ் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு புதிய வரிகளையும் விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அப்படி வருமான வரியை உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரிய நிவாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மிடில் கிளாஸ்
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த வார இதழான பாஞ்சஜன்யா பத்திரிக்கை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நானும் மிடிள் கிளாஸை சேர்ந்தவள்தான். எனவே, நடுத்தர வர்க்கத்தின் அழுத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நடுத்தர வர்க்கத்தினரைச் சேர்ந்த ஒருவராகவே என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன். மத்திய அரசு மிடில் கிளாஸ் மக்கள் மீது எந்தவொரு வரியையும் விதிக்கவில்லை என்பதை நான் மக்களிடம் நினைவு கூர விரும்புகிறேன்.

உள்கட்டமைப்பு
மேலும், இப்போது 5 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எந்தவொரு வரியையும் செலுத்தத் தேவையில்லை.. நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கு மொத்தம் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை வழங்கியுள்ளோம். மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். மிடில் கிளாஸ் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

பிரச்சினைகள் தெரியும்
அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அரசு அவர்களுக்காக நிறையச் செய்திருக்கிறது. வரும் காலத்திலும் தொடர்ந்து அவர்களுக்கு உதவும் திட்டங்களை முன்னெடுப்போம்" என்றார். அதேநேரம் வரும் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன மாதிரியான திட்டங்களை அறிவிக்க உள்ளனர் என்பது குறித்து எந்தவொரு தகவலும் அவரது பேச்சில் இடம்பெறவில்லை. தொடர்ந்து பேசிய அவர் கடந்த 2020 முதல் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அரசு மூலதனச் செலவுகளை உயர்த்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வங்கிகள்
தொடர்ந்து பேசிய அவர், "நடப்பு நிதியாண்டில், இது 35% அதிகரிக்கப்பட்டு, 7.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கித் துறையில், அரசு முன்னெடுத்துள்ள திட்டம் பொதுத்துறை வங்கிகள் மறுமலர்ச்சி அடைய உதவியுள்ளது. இதன் காரணமா வாராக்கடன்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் கணிசமாக மேம்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு உதவவும் அவர்களைக் காக்கவும் மத்திய அரசு ₹ 2.11 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது" என்றார்.

பொதுத்துறை வங்கிகள்
2020-21ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ. 31,820 கோடியாக அதிகரித்தது. வாரக் கடன் கணிசமாகக் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்த போதிலும், இந்த நிதியாண்டின் லாபம் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ. 66,539 கோடியாக இருந்தது. கடந்த 2015-16 முதல் 2019-20 வரையிலான ஐந்து ஆண்டுகளில் அரசு பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக ₹ 2,07,329 கோடி நஷ்டம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலவசங்கள்
தொடர்ந்து மற்ற துறைகள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வர்க்கத்தில் கூட பாகிஸ்தான் நமக்கு ஆதரவாக இருந்தது இல்லை. அதிலும் 2019இல் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகள் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இலவசங்களைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு வாக்குறுதிகள் வழங்க வேண்டும்.. அதில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்" என்றார்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக்












Click it and Unblock the Notifications