டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.

டெல்லியில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் அதாவது அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Fire accident in Delhi AIIMS hospital

பெரும் தீவிபத்தை அடுத்து தகவலின் பேரில் 22 தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பிரிவு மூடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதுவரை யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

இந்த மருத்துவமனையில்தான் முன்னாள் அமைச்சர் அருண்ஜேட்லி உடல்நிலை பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுளார். இவரை சந்திக்க மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் தரைதளத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+