கொடூரம்! கோயிலில் இருந்து 8ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்! சகோதரர் மீதும் தாக்குதல்
டெல்லி: தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத் பகுதியில் சிறுமி ஒரு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பாலியல் மற்றும் வன்முறை குற்றங்கள் சமீப ஆண்டுகளாகக் கணிசமாக அதிகரித்து உள்ளது.
அதிலும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. அப்படியொரு சம்பவம் தான் காசியாபாத் பகுதியில் அரங்கேறி உள்ளது.

டெல்லி
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதியில் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும், அந்த கும்பல் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரரையும் கடுமையாகத் தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மத வழிபாட்டுத் தலம்
பாதிக்கப்பட்ட அந்த 8ஆம் வகுப்பு சிறுமியும், அவரது சகோதரரும் மத வழிபாட்டுத் தளத்திற்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து இருவரும் வீட்டுக்குத் திரும்பிய சமயத்தில் தான், வழியிலேயே அவர்கள் இருவரும் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை அந்த கும்பல் ஒதுக்குப்புறமான இடத்திற்குக் கடத்தி சென்று உள்ளது. சிறுமியின் சகோதரரை, ரூம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
சிறுமியைக் காப்பாற்ற முயன்ற போது, அந்த கும்பல் சிறுமியின் சகோதரரைக் கொடூரமாகத் தாக்கி உள்ளது. மேலும், சகோதரரை ரூமில் அடைத்து வைத்த அந்த கும்பல், சிறுமியைக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என்றும் கூட இருவரையும் மிரட்டி உள்ளனர். இருப்பினும், காயத்தைப் பார்த்து சிறுமியின் பெற்றோர்கள் விசாரித்து உள்ளனர்.

போலீசார்
அப்போது அவர்கள் என்ன நடந்தது என்பதைப் பெற்றோரிடம் அழுது கொண்டே கூறி உள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் உடனடியாக இது குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மோடிநகர் போலீஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி
இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறுகையில், "நான் எனது சகோதரருடன் வழிபாட்டுத் தலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது எங்களை அடையாளம் தெரியாத சிலர் கடத்தினர். அங்கிருந்த ரூமில் எனது சகோதரரை அடைத்து வைத்து, என்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து நாங்கள் தப்பிக்க முயன்றோம். ஆனால் எங்களால் தப்பிக்க முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
