ஜஸ்ட் 100 நிமிடங்களில் ஆக்ஷன்.. "சி விஜில்" ஆப்பில் புகார் சொல்லலாம்.. தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி
‘சி விஜில்’ ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர்
டெல்லி: 5 மாநில தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் cVIGIL என்ற செயலியை உருவாக்கியுள்ளது.. இந்த cVIGIL செயலி மூலம் அரசியல் கட்சிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது..

விதிமுறைகள்
5 மாநிலங்களிலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.. அதேபோல வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது... இந்த 5 மாநில தேர்தல் விதிமுறைகள் குறித்தும், ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்..

ஆன்லைன்
அதில், ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்து தரப்படும் என்றும் தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் உறுதி தந்துள்ளார். அதேபோல, வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும் என்றும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

உறுதி
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி தரப்படுவதாக கூறிய ஆணையர், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதிக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார். இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் cVIGIL என்ற செயலியை உருவாக்கியுள்ளதாக தேர்தல் ஆணையர் கூடுதலாக தெரிவித்துள்ளார்..

பதிவிறக்கம்
இந்த cVIGIL செயலி மூலம் அரசியல் கட்சிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம், மேலும் பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ, ஆடியோ அல்லது தேர்தல் அத்து மீறலுக்கான ஆதாரங்களையும் பதிவேற்றலாம் என்றும், இந்த ஆப்களில் புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். புகார் வந்த 100 நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பார்கள் என்றும் ஆணையர் நம்பிக்கை கூறியுள்ளார்.

தமிழ்
கடந்த மார்ச் மாதமே இந்த ஆப் குறித்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.. அதுமட்டுமல்ல, சி விஜில் செயலியில் ஏற்கனவே ஆங்கிலம், இந்தியில் மட்டுமே விவரங்கள் உள்ளன... எனினும், இதில் தமிழில் புகார் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படுமா என்று சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையரிடமே இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, ஒருசில தினங்களில் சி விஜில் செயலியில் தமிழிலும் புகார் பதிவுசெய்யலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இலவசங்கள்
அந்த வகையில் இந்த சி விஜில் ஆப் வரும் தேர்தலில் அறிமுகமாக உள்ளது.. மாதிரி நடத்தை விதிகளை மீறுதல், பணம் விநியோகம் மற்றும் இலவசங்கள் போன்றவை குறித்து இந்த ஆப்-ல் புகாரளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் பணியாளர்கள் குறிப்பாக கிராம உதவியாளர்கள் முதல் மாவட்ட கலெக்டர் வரை அனைத்து வகையான அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ரகசியம்
அப்படி இருந்தும் தேர்தல் காலங்களில் விதிமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவே, தேர்தல் ஆணையம் இந்த சி விஜில் செயலியை பயன்படுத்த போகிறது.. இதில், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதி தரப்பட்டுள்ளதால், நிச்சயம், தேர்தல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

வீடியோ
இந்த ஆப்பை எப்படி உபயோகிப்பது என்பது குறித்தும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.. சி விஜில் செயலியை திறந்ததுமே நம்முடைய மெயில் ஐடி அல்லது போன் நம்பரை பதிவு செய்துவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.. அதன்பிறகுதான், நம்முடைய மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்... பிறகு நம்முடைய புகாரை அதில் தெரிவிக்கலாம்.. அரசியல் வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை பார்த்தால், அதனை போட்டோ அல்லது வீடியோ எடுத்து இதில் ஷேர் செய்தும், நம் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications