அதிமுகவில் இபிஎஸ் ஒற்றை தலைமைக்கு அங்கீகாரம் தந்த உச்சநீதிமன்றம்- ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் என்ன?
அதிமுகவில் இபிஎஸ்-ன் ஒற்றை தலைமையை உறுதி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்கு காரணமான ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை விவரிக்கிறது இச்செய்தி.
டெல்லி: அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி பொதுக் குழுவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். அப்போதே ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் ஜூலை 11 பொதுக்குழுவை கூட்ட அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையில் நடைபெற்ற ஜூலை 11 பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த தீர்மானம்: கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, கழக சட்ட திட்ட விதி 20அ பிரிவு 7ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
புதிய பொதுச்செயலாளர் தேர்தல் தீர்மானம்:
கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் விரைந்து நடத்தி முடிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதைக் கருத்தில்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது: கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில், இன்றைய தேதிவரை, அதாவது 11.07.2022 வரை, கழக உறுப்பினர்களாகப் பதிவேட்டில் உள்ளவர்கள், வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். கழக உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறுப்பினர் உரிமைச் சீட்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய கழக உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும். மேற்படி, கழகப் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.மேலும், கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், M.LA, அவர்களும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., அவர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இப்பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

இரட்டை தலைமை ரத்து தொடர்பான தீர்மானம்:
கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக தீர்மானம். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் உணர்விற்கும், விருப்பத்திற் ஏற்ப, எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் வலிமை சேர்க்கப்பட்ட, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படு "கழகப் பொதுச் செயலாளர்" என்ற தலைமையை மீண்டும் உருவாக்க, தற்பொழுது உள்ள இரட்டைத் தலைமையான கழக ஒருங்கிணைப்பாளர் மற்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில், கழக சட் திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. விதி 43ன்படி, "கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும்-திருத்தவும்-நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில் திருத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள், 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் வைத்து அனுமதி பெறாததால் மேற்படி திருத்தங்கள் தானாகவே காலாவதி ஆகிவிட்டன. இந்த காலாவதியான சட்டத் திருத்தங்கள் அனைத்தும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுமுறை பற்றித்தான். இந்த திருத்தங்கள் காலாவதியானாலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தலைமையில் நடந்த கழக அமைப்புத் தேர்தல்கள் உட்பட அனைத்து செயல்களையும் இப்பொதுக்குழு ஏற்றுக்கொள்கிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications