இந்திராவின் அவசரநிலை காலத்தில் 'மன்னிப்பு கடிதம்' தந்த ஆர்எஸ்எஸ் 'தலை'கள்- போட்டுடைத்த சு.சுவாமி!
டெல்லி: 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை எனும் எமர்ஜென்சி காலத்தை ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் இந்திரா காந்திக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதியவர்கள் என விமர்சித்திருந்தார் இன்றும் பாஜகவில் உறுப்பினராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நாட்டில் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தார். ஒட்டுமொத்த ஜனநாயகமும் காலில் மிதிக்கப்பட்டு தலைவர்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். 1971-ல் இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை எதிர்கொண்டனர்.

இந்த அவசர நிலை காலத்தை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் (#DarkDaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது என பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்றைக்கும் பாஜகவின் உறுப்பினராக இருக்கும் அக்கட்சியின் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 23 ஆண்டுகளுக்கு முன்னர் தி இந்து, பிரண்ட்லைன் இதழ்களில் அவசர நிலை காலத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எழுதி இருந்ததாவது: 1975-77 ஆம் ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளாகத்தான் இருந்தார்கள். மகாராஷ்டிராவின் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் பாலாசாகேப் தியோரஸ், இந்திரா காந்திக்கு எண்ணற்ற மன்னிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இணைந்து செயல்படாது; இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை ஆதரிக்கிறோம் எனவும் தியோரஸ் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அப்போது இந்திரா காந்தி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான வாஜ்பாய் பங்கேற்கவில்லை. இதற்கு வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதம்தான் எனவும் குறிப்பிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை குறிப்புகளில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் சுவாமி அதில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, "It is on the record in the Maharashtra Assembly proceedings that the then RSS chief, Balasaheb Deoras, wrote several apology letters to Indira Gandhi from inside the Yerawada jail in Pune disassociating the RSS from the JP-led movement and offering to work for the infamous 20-point programme. Mr. Atal Behari Vajpayee also wrote apology letters to Indira Gandhi, and she had obliged him எனவும் சுப்பிரமணியன் சுவாமி பதிவு செய்திருக்கிறார் என்பது வரலாறு.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications