மூன்று மொழிகள் கற்பது கட்டாயம்.. ஆனால்.. புதிய கல்வி கொள்கை குறித்து ரமேஷ் பொக்ரியால் பேட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: NEP (புதிய கல்வி கொள்கை) என்பது இந்தியாவின் கல்வி முறையின் மிகவும் அவசியமான மாற்றமாகும். மேலும் இந்த புதிய கல்வி கொள்கை என்பது கல்வியின் தரத்தை ஊக்குவிப்பதுடன், பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கற்பித்தலில் இந்தியாவின் மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை வேரூன்ற வைப்பதாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கல்வி முறை குறித்து மிகப்பெரிய விவாதங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இருமொழிக்கொள்கைக்கு முடிவு கட்டும் வகையில் உள்ளது. இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தாலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றாக வேண்டும்.

இந்த கல்வி முறை குறித்து பிரபல ஆங்கில ஊடகம், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் மின்னஞ்சல் வாயிலாக நேர்காணல் செய்தது. அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் பார்ப்போம்.

எப்படி கற்பிக்கப்படும்

எப்படி கற்பிக்கப்படும்

கேள்வி: 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பிக்கும் விஷயம் எவ்வாறு வலியுறுத்தப்படும்?

பதில்: ஆரம்ப கட்டத்திலிருந்தே குழந்தைகளுக்கு வெவ்வேறு மொழிகள் பயிற்றுவிக்கப்படும். ஆனால் தாய்மொழிக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைத்து மொழிகளும் சுவாரஸ்யமாக மற்றும் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்கப்படும், ஆரம்பத்தில் வாசிப்பு மற்றும் பின்னர் தாய்மொழியில் எழுதுதல். 3ம் வகுப்பில் இருந்து பிற மொழிகளில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் திறன்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் அதிக எண்ணிக்கையிலான மொழி ஆசிரியர்களுக்கு முதலீடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து ஒரு பெரிய முயற்சி முன்னெடுக்கப்படும். அந்தந்த மாநிலங்களில் மூன்று மொழிகளை கற்பிக்க ஒருவருக்கொருவர் ஆசிரியர்களை நியமிக்க மாநிலங்களிடையே இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம்.

பல மொழி தேசம் இது

பல மொழி தேசம் இது

கேள்வி: பல பிராந்திய மொழிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு எந்த மொழி தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்?

பதில்: தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக பன்மொழி கொள்கை ஊக்குவிக்கப்படும். மூன்று மொழி பார்முலாவில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும், எந்த மாநிலத்திற்கும் எந்த மொழியும் திணிக்கப்படாது. மூன்று மொழிகளும் மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் தேர்வாக இருக்கும், குறைந்தபட்சம் இரண்டு மொழிகளாவது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய பன்முகத்தன்மைக்கு தீர்வு காண, ஆசிரியர்கள் இருமொழி அணுகுமுறையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

ஆங்கில கற்பித்தல்

ஆங்கில கற்பித்தல்

கேள்வி: கற்பித்தல் முறை ஆங்கிலமாக உள்ள பள்ளிகளுக்கு இனி என்ன நடக்கும்?

பதில்: மூன்று மொழி பார்முலா என்பது ஆங்கிலத்துடன் இந்தியாவின் இரண்டு சொந்த மொழிகளையும் உள்ளடக்கியது விஞ்ஞானம் மற்றும் கணிதத்திற்கான இருமொழி பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், இதனால் மாணவர்கள் தங்கள் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் சிந்திக்கவும் பேசவும் முடியும்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

கேள்வி: இந்திய மொழிகள் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் புதிய கல்வி திட்டத்தில் வலுவான முக்கியத்துவம் உள்ளது. இது எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது?

பதில்: உயர்கல்வியில் கூடுதல் திட்டங்களுடன் தாய்மொழியையும் உள்ளூர் மொழியையும் கற்பிக்கும் வழிமுறையாக பயன்படுத்தப்படும். இதனால் இரு மொழிகளிலும், சேர்க்கை மற்றும் மொத்த சேர்க்கை விகிதம் அதிகரிக்கும். அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கும். அகில இந்திய மொழி பெயர்ப்பு நிறுவனம் மற்றும் பாலி, பாரசீக மற்றும் பிரகிருதத்திற்கான தேசிய நிறுவனம் நிறுவப்படும். சமஸ்கிருதம் உள்பட அனைத்து இந்திய மொழி வாரியாகவும் மொழிபெயர்ப்புக்கு போதிய அளவில் ஆட்கள் நியமித்து பலப்படுத்தப்படும். கிளாசிக்கல், பழங்குடி மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாத்து ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

நிறைய கட்டமைப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு செயல்படுத்தப்படும்?

பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு மற்றும் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள், அதை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் பரிந்துரைகளைச் செயல்படுத்த நிதிகள் மதிப்பிடப்பட்டு அவை வழிநடத்தப்படும். இந்த செயல்படுத்தல் திட்டம் என்பது பள்ளி கல்வியில் ‘குவெஸ்ட்' ‘Quest' ( அறிவை தேடுதல்) மற்றும் உயர் கல்வியில் ‘சித்தப்படுத்துதல்' ( ‘Equip') (ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவையான விஷயங்களை வழங்குவது) ஆகிய பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

செயல்முறை

செயல்முறை

கேள்வி: இந்த புதிய கல்வி முறையின் செயல்முறை எப்போது தொடங்கும்?

பதில்: மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் குறிப்புடன் கிட்டத்தட்ட தயாராக உள்ளது, விரைவில் மத்திய அரசின் ஒப்புதலை பெறும்.

ஒழுங்குமுறை அமைவு

ஒழுங்குமுறை அமைவு

கேள்வி: கல்விக்காக உருவாக்கப்படும் புதிய ஒழுங்குமுறை அமைவு மேலும் சிவப்பு நாடாவை உருவாக்கி விடாதா?

பதில்: ஒழுங்குமுறை, அங்கீகாரம், நிதி மற்றும் கல்வி தர நிர்ணயித்தல் ஆகிய செயல்பாடுகள், தனித்துவமான, சுவாதீனமான மற்றும் அதிகாரம் பெற்ற அமைப்புகளால் செய்யப்படும் இதை கல்வி ஒழுங்குமுறை அமைப்பு உறுதி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+